28/07/2026 செவ்வாய் - உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 14, 2026

28/07/2026 செவ்வாய் - உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு



28/07/2026 செவ்வாய் - உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு 28/07/2026 செவ்வாய் அன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.

Local Holiday Announcement: The District Collector of Tenkasi has declared a local holiday on July 28, 2026 (Tuesday), for the Aadi Thapasu Thiruvizha at the Adi Sankaranarayana Swamy Temple in Sankarankovil.

Applicability: This holiday applies to all State Government offices and institutions in the Sankarankovil taluk and city.

Exemptions: The holiday does not apply to banks under the Negotiable Instrument Act of 1881, and essential treasury services will remain functional.

Replacement Workday: To compensate for this holiday, August 1, 2026 (Saturday), will be a working day for all government offices in the district. செ.வெ.எண்: 32

बी: 14.07.2026

தென்காசி மாவட்டம்

உள்ளூர் விடுமுறை -ஆடித்தபசு திருவிழா 28.07.2026-

மாவட்ட ஆட்சியர் திருரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப, அவர்கள்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம், அ/மி சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா எதிர்வரும் 28.07.2026 செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருப்பதால் அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குட்பட்டு 28.07.2026 செவ்வாய்கிழமை அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 01.08.2026 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தென்காசி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.