தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை -6
5.5.6. 035316/8/1/2026, . 18.06.2026
பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்
பொருள்
பள்ளிக் கல்வி - தேசிய நல்லாசிரியர் விருது 2026 விண்ணப்பங்கள் இணைய தளம் வழியாக பதிவேற்றம் செய்தல் - மாவட்டத் தேர்வுக் குழு உறுப்பினர் - மாநிலப் பிரதிநிதி நியமனம் - தொடர்பாக
பார்வை
http://nationalawardstoteachers.education.gov.in στ இணைய வழியிலான தகவல்
பார்வையில் காணும் இணையதளத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து வகையான பள்ளி ஆசிரியர்கள் அவர்தம் http://nationalawardstoteachers.education.gov.in στο வாயிலாக 10.07.2026 க்குள் விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கீழ்கண்டவாறு மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக் குழுவிற்கு தேர்வு பட்டியலை 14.07.2026 முதல் 21.07.2026 தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், மாநிலப் பிரதிநிதியாக ஒருவரும். மாவட்ட ஆட்சியரின் பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரையும் உட்படுத்தி மாவட்ட தேர்வுக் குழுவினை அமைத்து. மாவட்ட நிலையில் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து, மாநிலத் தேர்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. This document outlines the procedure for submitting applications for the National Award to Teachers 2026 in Tamil Nadu.
Teachers must upload their details directly to the official website by July 10, 2026.
District-level selection committees are required to submit their selected teacher lists to the state committee via the website between July 14 and July 21, 2026.The selection process involves vetting applications by a committee led by the District Chief Educational Officer and sending recommendations to the state level.
CLICK HERE TO DOWNLOAD National Award to Teachers 2026 in Tamil Nadu பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.