சிறப்பு TET தேர்வு கடினமா?: விமர்சனங்களுக்கு TRB விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 7, 2026

சிறப்பு TET தேர்வு கடினமா?: விமர்சனங்களுக்கு TRB விளக்கம்



The Tamil Nadu Teacher Recruitment Board (TRB) has issued a clarification regarding the difficulty level of the Special TET exam.

The exam was conducted on July 4 and 5, with 59,535 candidates taking Paper-1 and 1.60 lakh taking Paper-2.

TRB stated that all questions were based on the syllabus prescribed by the National Council for Teacher Education (NCTE).

The syllabus for Paper-1 covered classes 1-5, and Paper-2 covered classes 6-8, with question standards set at a higher secondary level.

சிறப்பு டெட் தேர்வு கடினமா?: விமர்சனங்களுக்கு டிஆர்பி விளக்கம்

சென்னை, ஜூலை 7: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடினமாக இருந்த தாக பல்வேறு தரப்பினர் விமர்சித் திருந்த நிலையில், ஆசிரியர் கல் விக்கான தேசிய கவுன்சில் (என்சி டிஇ) வழிகாட்டுதலின்படி நிர்ண யிக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் வினாக்கள் இடம்பெற்றிருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) விளக் கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் செவ் வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பள்ளிகளில் பணியாற்றும் ஆசி ரியர்களுக்கான சிறப்பு டெட் தாள்-1, தாள்-2 தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகள் நடைபெற்றன. தாள்-1-ஐ 59,535 பேரும், தாள்-2-ஐ 1.60 லட்சம் பேரும் எழுதினர். சிறப்பு டெட் தேர்வில் வினாக் கள் கடினமாகக் கேட்கப்பட்டுள் ளதாக தேர்வெழுதிய ஆசிரியர் கள் தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமா கிறது. பணிபுரியம் ஆசிரியர்க ளுக்கான டெட் தேர்வு தொடர் பான பாடத்திட்டம் என்சிடிஇ வரையரை செய்த பாடத்திட்டம் ஆகும்.

டெட் தாள்-1 பாடத்திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை என்றும், தாள்-2-க்கு ரிய பாடத்திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட் டம் என நிர்ணயிக்கப்பட்டாலும் பாடத்திட்டத்தின் தரம் மேல்நி லைக் கல்வி தரம் அளவுக்கு இருக் கும் என டெட் தேர்வு அறிவிக்கை யில் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளது.

எனவே, டெட் தாள்-1, தாள்-2 தேர்வுகளுக்கான வினாத்தாள்க ளில்கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் என்சிடிஇ வழிகாட் டுதல் படியும், நிர்ணயிக்கப்பட் டுள்ள பாடத்திட்டங்களின் அடிப் படையிலும் மட்டுமே கேட்கப்பட் டுள்ளன எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் அரசாணைபடியே கேட்கப்பட்டன - ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்.

அறிவிக்கை எண்.01/2026

நாள்:13.02.2026-இன்படி

நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.



ஆசிரியர் தகுதித்தேர்வு கடினமா? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் Is the Teacher Eligibility Test difficult? Teachers Recruitment Board clarifies:

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் στσίστ.01/2026 ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-1 இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும், தாள்-II இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர். இத்தகுதித்தேர்வில் தாள்-1 மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததாக சில தினசரி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தேர்வு வினாத்தாள் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் PDF பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சார்ந்த 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் (Structure and content) கீழ் வழங்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அரசாணை (நிலை) எண்.181. பள்ளிக் கல்வித் (C2) துறை, நாள்.15.11.2011 இன்படியும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாள்-I சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based

மாநிலத்தின் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தரம் மற்றும் இணைப்புகள் மேல்நிலைப் பள்ளி நிலை வரை இருக்கும். தமிழ் நௌ ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II இல் உள்ள கேள்விகள், மாநிலத்தின் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் தரம் மற்றும் இணைப்புகள் மேல்நிலைப் பள்ளி (சீனியர் செகண்டரி) நிலை வரை இருக்கும். எனவே, அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன

CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.