வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 13, 2026

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி



வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி - Free coaching for TNPSC and Railway exams offered by the Department of Employment and Training.

வேலைவாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் டிஎன்​பிஎஸ்​சி, எஸ்​எஸ்​சி, ரயில்வே தேர்​வு​களுக்கு சென்​னை​யில் இலவசப் பயிற்சி வகுப்​பு​கள் நடத்​தப்​படு​கின்​றன.

இது தொடர்​பாக வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் இயக்​குநர் சி.பழனி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வேலை​வாய்ப்பு, பயிற்​சித்துறை​யின் கீழ் சென்னை கிண்​டி​யில் இயங்​கிவரும் மாநில தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தில் உளவியல் பகுப்​பாய்வு சோதனை​களு​டன் வழி​காட்​டு​தல், பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு தொழில்​நெறி வழி​காட்​டு​தல் மற்​றும் ஆலோ​சனை வழங்​குதல், போட்​டித் தேர்​வு​களுக்கு நேரடி பயிற்சி வகுப்​பு​கள், மாதிரித் தேர்​வு​கள் நடத்​துதல், கல்வி தொலைக்​காட்சி வாயி​லாக போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளித்​தல் என பல்​வேறு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்வு மற்​றும் குரூப்​-1, குரூப்​-2, குரூப்-4 தேர்​வு​கள், ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு மற்​றும் குரூப்​-டி தேர்​வு, எஸ்​எஸ்சி சிஜிஎல் தேர்வு ஆகிய​வற்​றுக்கு ஜூன் 1 முதல் பயிற்சி வகுப்​பு​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

டிஎன்​பிஎஸ்சி தேர்​வு​களுக்​கான வகுப்​பு​கள் திங்​கள், புதன், வெள்ளி ஆகிய நாட்​களிலும், ரயில்​வே, எஸ்​எஸ்சி தேர்​வு​களுக்​கான வகுப்​பு​கள் செவ்​வாய், வியாழன் ஆகிய நாட்​களிலும் காலை 10 ​முதல் மதி​யம் 1 மணிவரை நேரடி​யாக​வும், அதே நாட்​களில் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை ஆன்​லைன் வழி​யாக​வும் நடை​பெறுகின்​றன.

போட்​டித் தேர்​வு​களுக்கு தயா​ராகிவரும் மாணவர்​கள் இந்த பயிற்சி வகுப்​பு​களில் நேரடி​யாக கலந்​து​கொண்டு பயன்​பெறலாம்.

இதில் சேர விரும்​புவோர் ஆதார் அட்டை நகல், பாஸ்​போர்ட் அளவு போட்​டோவுடன் கிண்டி திருவிக தொழிற்​பேட்டை பேருந்து நிலை​யம் (ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) அருகே உள்ள டான்சி கட்​டிடத்​தின் முதல் தளத்​தில் (ஏ-28) இயங்​கும் மாநில தொழில்​நெறி வழி​காட்டு மையத்தை (தொடர்பு எண்: 9361566648) நேரில்​ அணுகலாம்​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.