ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 13, 2026

ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ்



This Tamil news article indicates that free bus passes for students in Tirupur must be issued by July 31.

Data for students from classes 1 to 12 is collected via the EMIS (Educational Management Information System) portal.

Transport officials are instructed to complete 80% of the pass printing work by the end of June to avoid delays.

Until new passes are issued, students can travel for free on government buses by showing their old bus pass or wearing their school uniform.

ஜூலை 31ம் தேதிக்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ்

திருப்பூர், ஜூன் 13-

மாணவ, மாணவிய ருக்கு ஜூலை 31ம் தேதிக் குள் பஸ் பாஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் பிளஸ் வரை படிக்கும் மாணவர்களின் விபரங்கள் 'எமிஸ்' தளம் மூலம் சேகரிக்கப்பட் டுப் போக்குவரத்து கழ கத்திற்கு வழங்கப்படும்.

கடந்த ஆண்டுகளில் அக்டோபர், செப்டம்பர் மாதங்கள் வரை பஸ் பாஸ் வழங்க தாமதமானதால், இந்தாண்டு விபரங்களை பள்ளி நிர்வாகங்கள் அனுப் பும் காலக்கெடுவை அரசு முறைப்படுத்தியுள்ளது. இந்தாண்டு தாமதத் தைத் தவிர்க்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வரை சேர்ந் துள்ள மாணவர்களின் விபரங்களை ஒரு பகுதி யாகவும், ஜூன் இறுதி வரை சேரும் மாணவர்க ளின் விபரங்களை மற் றொரு பகுதியாகவும், பஸ் பாஸ் விருப்பம் தெரிவித் தவர்களின் பட்டியலோடு அனுப்ப உத்தரவிடப்பட் டுள்ளது.

ஜூன் இரண்டாவது வாரம் வரையிலான கணக் கெடுப்பின்படி, கோவை மாவட்டத்தில் 2.74 லட் சம் மாணவர்களும், திருப் பூர் மாவட்டத்தில் 2.60 லட்சம் மாணவ, மாணவி யரும் இலவச பஸ் பாஸ் பெற தகுதியானவர்களாக அறியப்பட்டுள்ளனர். முதற்கட்ட பட்டியலின் அடிப்படையில், ஜூலை முதல் வாரத்தில் பஸ்பாஸ் அச்சிடும் பணி தொடங் கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தாமதத்தைத் தவிர்க்க ஜூன் இறுதிக்குள் 80 சத வீத பணிகளை முடிக்க வேண்டும். ஜூலை இறுதிக்குள் பஸ் பாஸ் அச்சிட்டு, பள்ளி முகவ ரிக்கு அனுப்பியவுடன் தலைமை ஆசிரியர்கள் அதை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பாஸ் வழங்கும் வரை, மாணவர்கள் தங்க ளின் பழைய பஸ் பாஸைக் காண்பித்தோ அல்லது பள்ளி சீருடை அணிந்தோ அரசு பஸ்களில் இலவச மாகப் பயணிக்கத் தடை யில்லை" என்று தெரிவித் துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.