100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள், தலைமையாசிரியர் பெயர் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 9, 2026

100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள், தலைமையாசிரியர் பெயர் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



Director of School Education Issues Order Seeking Details of Schools That Achieved 100% Pass Results, Names of Headmasters, and Students Who Scored 100 Marks in the Tamil Subject! - 100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள், தலைமையாசிரியர் பெயர் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.

ந.க.எண். 022061/ஐ/இ1/2026.

நாள்.204.2026

பொருள்:

பள்ளிக்கல்வி 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள், மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் பெயர்ப் பட்டியலினை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் அனுப்பத் தெரிவித்தல் -சாப்பு. பார்வை:

அரசாணை(நிலை)

நாள்.15.05.2025.

எண்.111. பள்ளிக்கல்வித்(பக5(1)) துறை.

பார்வையில் காணும் அரசாணையின் படி 2025-26 ஆம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தங்கள் மாவட்டங்களில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சமூக நலத்துறை பள்ளிகள் பட்டியலினை முழு முகவரியுடனும் & அக்கல்வியாண்டில் பணிபுரிந்த தலைமையாசிரியர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகள் பெயர்ப்பட்டியல் தயார் செய்து அப்பட்டியலில் பெயருக்கு முன்/பின் தலைப்பெழுத்துடன் (with initial). இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த 15 தினங்களுக்குள் isectiondse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அசலினை இவ்வியக்ககத்திற்கும் அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு:

i. படிவம் 1-100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள் & தலைமையாசிரியர்கள் விவரம்

ii. படிவம் 2-

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகள் விவரம்

CLICK HERE TO DOWNLOAD DSE - 100% Result Circular - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.