தேர்தல் பணி - Reserve-ல் இருந்தாலும் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 20, 2026

தேர்தல் பணி - Reserve-ல் இருந்தாலும் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது - CEO Proceedings



If election officials are assigned duties on a reserve basis, they must not, under any circumstances, leave the training premises without obtaining a formal release order — CEO Proceedings. தேர்தல் அலுவலர்கள் காத்திருப்பு நிலையில் (Reserve) பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால் எக்காரணம் கொண்டும் முறையான விடுவிப்பு ஆணை பெறாமல் பயிற்சி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது - CEO Proceedings

இந்த ஆவணம் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் வெளியிடப்பட்ட ஒரு அவசர தேர்தல் அறிவிப்பு ஆகும்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

தேர்தல் பணிகளை கவனத்துடனும் பொறுப்புடனும் செய்ய வேண்டும், எந்த காரணமும் கூறி பணியை தவிர்க்கக்கூடாது.

காத்திருப்பு நிலையில் (Reserve) இருப்பவர்கள் முறையான அனுமதி இல்லாமல் பயிற்சி இடத்தை விட்டு வெளியேறக்கூடாது.

பணிகளை புறக்கணிப்பவர்கள் மீது தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். //தேர்தல்/ மிக மிக அவசரம் //

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் யெல்முறைகள்

15.4298/51/2026.20.04.2026

பொருள்



பார்வை

காஞ்சிபுரம் அலுவலாம காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தொ செய்தி 20.4.2026 தேர்தல்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2028 வாக்குச் சாடிகளில் சாவடிகளில் ஊக்குச்சாவிட வாக்குச்சாவடி நிலை நிலை அலுவலர்களாக மற்றும் வாக் திவு அலுவலர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தேர்தல் வகுப்புகளில் தவறாது கலந்து கொள்ளவும். தேர்தல் பணியாற்றவும் அறிவுறுத்துதல் சார்பாக

வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர். ஆசிரியரல்லாத பணியாளர்கள் நேர்தல் வகுப்புகளில் தவறாது கலந்து கொள்ளவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணியை எந்தவித தவிர்ப்போ, விலக்கோ கோராமல் மிகுந்த கவனத்துடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது. தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்களை தத்தமது அலுவலகப் பணியாளர்கட்கு இதுகுறித்து தெளிவான அறிவுரைகள் வழங்கிட கேட்டுக் கொள்ளலாகிறது.

தேர்தல் அலுவலர்கள் எவருக்கேனும் காத்திருப்பு நிலையில் (Reserve) பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால் எக்காரணம் கொண்டும் முறையான விடுவிப்பு ஆணை பெறாமல் பயிற்சி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது.

தேர்தல் பணிகளை / பயிற்சி வகுப்புகளை காத்திருப்பு நிலை (Reserve) உட்பட புறக்கணிப்பவர்கள் மீது தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் அனைத்து நிலை ஆசிரியர்கள்/பணியாளர்களின் கவனத்திற்கு இதன் மூலம் கொண்டுவரப்படுகிறது.

04/2026 முதன்மைக் கல்வி அலுவலர் காஞ்சிபுரம்.

பெறுநர்

1 முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், களியாம்பூண்டி அனைத்து மாவட்டக் கல்வி

2. அலுவலர்கள். (இடைநிலை, தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், காஞ்சிபுரம் மாவட்டம்.

அரசு / அரசு உதவிபெறும் நெடுநிலை; தொடக்க /உயர்/மேல்நிலைப் பள்ளிகள்/சுயநிதி தனியார் மெட்ரிக் பள்ளிகள். காஞ்சிபுரம் மாவட்டம். தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.