The article discusses the central government's approval to increase dearness allowance for its employees and pensioners to help combat inflation.
Dearness allowance and relief increased by 2% for employees and pensioners.
This hike brings the total allowance from 58% to 60% of basic pay, effective from January 1st.
Beneficiaries include approximately 5.46 lakh employees and 68.27 lakh pensioners.
The increase will result in an additional annual expenditure of ₹6,791.24 crore for the central government.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
நமது சிறப்பு நிருபர்-
மத்திய அரசு ஊழி யர்கள் மற்றும் ஓய்வூதி யதாரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அக விலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்பதல் அளித் தது.
இதன் மூலம் 5.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.27 லட் சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறவுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் மத்திய அரசு ஊழியர்க ளுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்க ளுக்கான அகவிலை நிவார ணத்தை இரண்டு சதவீதம்
வரை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற் போது நிலவும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் அகவிலைப் படியை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுவரை அடிப்படை சம்பளத்தில் இருந்து 58 சதவீதம் வரை அகவி லைப்படி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜன., 1ம் தேதியிட்டு 60 சதவீத மாக உயர்த்தி வழங்கப்ப டவுள்ளது.
இதன் மூலம் நாடு முழுதும் உள்ள 5.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட் சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறவுள்ளனர்.
அகவிலைப்படி உயர் வால் மத்திய அரசுக்கு
6791.24 ஆண்டுக்கு கோடி ரூபாய் வரை கூடு தல் செலவாகும்.
'எட்டா வது ஊதிய கமிஷன் பரிந் துரையின்படி சம்பளத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என மத்திய தொழிலாளர் சங்கங்கள் அழுத்தம் கொடுத்து வரு கின்றன.
அடிப்படை சம் பளத்தை 18,000 ரூபாயில் இருந்து 69,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண் டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.
இந்தச் சூழலில் ஏழா வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் பேரில் அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.
Monday, April 20, 2026
New
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
Revision of rates of Dearness Allowanc
Tags
Central Government,
Central Government Employees,
Dearness Allowance,
govt employees' dearness hike,
Rate of Dearness Allowance,
Revision of rates of Dearness Allowanc
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.