வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த 2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் - தேர்தல் அதிகாரி நடவடிக்கை
வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த
2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்
காரைக்கால் தேர்தல் அதிகாரி நடவடிக்கை
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிவித்த நாளில் இருந்து நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இந்த விதிகளின்படி எந்த ஒரு அரசு, அரசு சார்ந்த நிறுவ னங்களின் ஊழியரும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது.
இது தொடர்பாக, மாவட்ட தேர் தல் அதிகாரி, அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவ னங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.
இந்தநிலையில் காரைக்கால் தெற்கு சட்டசபை தொகுதி யில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாகஜெய பிரகாஷ் நாராயண் அரசு கூட்டுறவு நூற்பாலை ஊழியர், பொதுப்பணித்துறையின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன பிரிவு ஊழியர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக மாவட்ட அதிகாரிக்கு புகார்கள் சென்றன.
தேர்தல்
அதன்பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிதா ரதி. பரிந்துரையின் பேரில், கூட்டுறவு நூற்பாலை ஊழியர் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் மீது கூறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Two government employees in Karaikal were suspended by the district election officer for campaigning in favor of a candidate contesting in the Puducherry assembly elections, violating election conduct rules.
Two government employees were suspended for participating in political campaigning.
The suspensions were ordered by the Karaikal District Election Officer.
The employees violated regulations prohibiting government staff from involvement in political activities.
An investigation is currently underway regarding the allegations.
Tuesday, April 7, 2026
New
வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த 2 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் - தேர்தல் அதிகாரி நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.