Proceedings of the Director of Elementary Education regarding the requisition of the number of Secondary Grade Teachers for the expansion of the Pay Matrix. - இடைநிலை ஆசிரியர்கள் Pay matrix விரிவாக்கம் செய்திட இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை கோருதல் சார்பாக தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006.
ந.க.எண்.11591163/ சி1/2025, நாள். 7.02.2026
பொருள்: தொடக்கக் கல்வி அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்வி மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் 01.01.2026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற ஊதிய உயர்வு பெற Pay Matrix விவிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குதல் கூடுதல் விவரங்கள் கோருதல் தொடர்பாக.
பார்வை:
1. அரசாணை(நிலை)எண்.303, நிதித் (ஊதியப் பிரிவு)துறை, நாள்.11.10.2017.
2. அரசாணை(நிலை)எண்.57, நிதித் (ஊதியப் பிரிவு) துறை, நாள்.19.02.2018.
3. அரசாணை(நிலை)எண்.90, நிதித் (ஊதியப் பிரிவு)துறை, நாள்.26.02.2021.
4. அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் கடிதம் நாள்.25.09.2025.
5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளரின் கடிதம் நாள்.25.09.2025
6.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் ந.க.எண்.1591163/சி1/2025, நாள்.07.01.2026. கடிதம்
7.அரசுக் கடித (efile)எண்.386/தொ.க.2(1)/2025, நாள்.26.02.2026
அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்வி மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் ஊதிய விகிதம் (PB-1 (5200-20200), Level-10, Cell-45, 01.01.2025 உடன் Pay Matrix முடிவடைந்நது. 01.01.2026-இல் ஆண்டு ஊதிய உயர்வுபெற Pay Matrix விரிவாக்கம் செய்திட பார்வை (6)-இல் காணும் கடிதம் மூலம் பெறப்பட்ட கோரிக்கையினை 07.01.2026 நாளிட்ட தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின்படி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. பார்வை 7-இல் காணும் அரசுக் கடிதத்தில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், புதுக்கோட்டை ஆர்.சி. தூயமேரி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி.சா.ரோஸ்லின் ஹில்டா என்பாரின் 01.01.2026 நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு பெற Pay Matrix விரிவாக்கம் செய்து ஊதியம் பெற அனுமதி வழங்குவது தொடர்பாக தனியரின் பணி விவரங்களுடன் (பணிப்பதிவேடுகளைச் சரிபார்த்து) ஊதிய விவரங்களை அட்டவணையாக அனுப்பி வைக்குமாறும், இப்பொருள் சார்ந்து இன்னும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளார்கள் என்ற விவரத்தினை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வை 7-இல் காணும் 26.02.2026 அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்தன்படி அரசாணை (நிலை) 61600r.90, நிதித் (ஊதியப் பிரிவு) துறை, நாள்.26.02.2021இன்படி தங்களது மாவட்டக் கட்டுப்பாட்டின்கீழ் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து 2800 கிரேடு ஊதிய அணி அட்டவணையின்படி (Pay Matrix) ஊதிய உயர்வுகளைப் பெற்று 75,900/- என்ற கடைநிலை ஊதிய விகிதத்தை அடைந்து, தொடர்ந்து ஊதிய உயர்வுபெற Pay Matrix இல்லாத இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை அரசுக்கு அனுப்ப ஏதவாக உடனடியாக அனுப்பிவைக்குமாறும். அவ்வாறு அந்த இடைநிலை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை சரிபார்த்து ஊதிய உயர்வு விவரங்களை அட்டவணையாகவும், பணிப்பதிவேட்டின் நகலுடனும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி),
2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) வழியாக)
CLICK HERE TO DOWNLOAD இடைநிலை ஆசிரியர்கள் Pay matrix விரிவாக்கம் செய்திட இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை கோருதல் சார்பாக தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.