A controversy has arisen in Coimbatore regarding election officials being treated to biryani and other meals by DMK party members at polling stations in the Coimbatore North constituency. An investigation is currently underway based on complaints filed by independent candidates.
DMK party members provided meals, including biryani, and snacks to election officials and staff at various polling stations.
These meals were provided for free on the night before the election and throughout election day.
Independent candidates have demanded action against the officials involved, leading to an official investigation.
தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி - புகாரால் நடக்கிறது விசாரணை
கோவை வடக்கு சட்டசபை தொகுதிக் குட்பட்ட ஓட்டுச்சாவடி களில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகா ரிகளுக்கும், பணியா ளர்களுக்கும் விருந்து பரிமாறி தி.மு.க.,வினர் உபசரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கண பதி அரசு மேல்நிலை பள்ளி, சங்கனூர் சாமிக வுண்டர் வீதி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, மணி யகாரம்பாளையம் மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மேலும் பல ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிந்த தேர்தல் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவு பரிமா றப்பட்டது.
புகாரால் நடக்கிறது விசாரணை தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் இரவும், தேர்தல் நாளன்றும் காலை, மதியம், இரவு நேரத்துக்கான உணவு மற்றும் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் காபி, டீ ஆகி யவை அதிகாரிகள் மற் றும் பணியாளர்களுக்கு பரிமாறப்பட்டது.
இதற்கான ஏற்பாடு களை தி.மு.க.,வினர் செய்திருந்தனர். இதற்காக எந்த தொகையையும் அதிகாரிகளிடமோ, பணி யாளர்களிடமோ பெற் றுக்கொள்ளவில்லை.
இது குறித்து விசா ரணையில் இறங்கிய வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வலியு றுத்தியுள்ளனர்.
இதையடுத்து சம் மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட் டுள்ளனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.