DEE Proceedings - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 27, 2026

DEE Proceedings - மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்! Proceedings of the Director of Elementary Education regarding the provision of simplified question papers to students with disabilities for the first time.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்: 003636/ ஜெ 2/2026. நாள்: .03.2026

பொருள்: -

தொடக்கக்கல்வி 2025-2026ஆம் கல்வியாண்டு ஆண்டு இறுதித் தேர்வு தொகுத்தறி மதிப்பீடு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைப்பாடுகள் (Cognitive disability) கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் - சார்ந்து.

பார்வை :

1. மாநிலத் திட்ட இயக்குநரின் ஒருங்கிணைந்த பள்ளிக் 556069 15.8.676OOT.136/CJ/EE/SS/2025.Date/26.02.2026. 2.இவ்வலுவலகக் கடிதம் எண்:003636/ஜெ2/2026,

நாள்: .03.2026

பார்வை-1 இல் கண்டுள்ளபடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பு 1 முதல் 5 வரை பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றலில் அவர்கள் நிலைக்கேற்ப அரும்பு, மொட்டு, மலர் மற்றும் வகுப்பு-4-க்கான அனைத்து பாடங்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் இவ்வாண்டு ஆண்டு இறுதித் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இம்மாணவர்களுக்கு முதன்முதலாக ஆண்டு இறுதித் தேர்வு தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. இவ்வினாத்தாளினை எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்ட அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கி மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டிய மாணவர்கள் விவரப்பட்டியலை சார்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளத் ஏற்படின் சார்ந்த பள்ளியின் சிறப்புபயிற்றுநர் தெரிவிக்கப்படுகிறது. தேவை ஏற்படின் தேவை ஆசிரியர்களுக்கு உதவலாம். இவ்வினாத்தாள்களை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பார்வை-2 இல் குறிப்பிடப்பட்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடமிருந்து மதிப்பீட்டினை மேற்கொள்ள வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும்(தொடக்கக்கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வழிகாட்டுதல்கள்:

• வகுப்பு 1 முதல் 5 வரை அரும்பு, மொட்டு, மலர் மற்றும் வகுப்பு 4 நிலைகளில் உள்ள அறிவுசார் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிடவேண்டும். பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில் கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

2025-2026 ஆம் கல்வியாண்டு இறுதி தேர்வு தொகுத்தறி மதிப்பீடு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல் முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD DEE Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.