70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 10, 2026

70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு

The provided text details a protest by unemployed computer science teachers in Tamil Nadu regarding recruitment issues in government schools.

Approximately 70,000 computer science teachers threaten to boycott the upcoming assembly elections if not hired.

Teachers demand direct recruitment for computer science positions from 6th to 10th grade, noting Tamil Nadu is the only state without this curriculum in government schools.

Allegations include the misappropriation of central government funds intended for teachers, diverted instead for school administration staff and private contractors.

அரசு பள்ளியில் பணி நியமனம் கோரி

70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு

சி.எஸ்.ஆறுமுகம்

கும்பகோணம்

அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே, தமிழகத் தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவி யல் பாடம் இல்லாமல் உள்ளது. மத்திய அரசின் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் அனைத்து மாநி லங்களும் கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாகவும், தனிப் பாடமாகவும் கற்றுத் தரும் நிலையில், தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் கொண்டு வராமல் உள்ளது.

ஆனால், மத்திய அரசு, கணினி ஆசிரியர்களுக்கு வழங்கும் நிதியை மடைமாற் றம் செய்து, அதை எமிஸ் ஆப ரேட்டர்களுக்கு பயன்படுத்து கின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்றுத் தர ஆசிரியர்களும் இல்லை, பாடங்களும் இல்லை. மாணவர்கள் 5 பாடங்களை மட்டும் கற்று வருகின்றனர்.


எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர் களை பணி நியமனம் செய்ய வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில துணைத் தலை வர் அ.ஆரோக்கியசாமி கூறி யது:

தமிழக அரசு, மத்திய அரசு வழங்கிய நிதியை மடைமாற்றம் செய்து கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கணினி ஆய்வகங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல், கணினி ஆசிரியர்களை நிய மிக்க வந்த நிதியில், அந்தப் பணிக்கு கல்வித் தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்து அலுவலகப் பணிக்கு மாற்றிக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லை. இதன்மூலம், 70 ஆயிரம் கணினி ஆசிரியர் குடும்பங்களையும் நடுத்தெரு வில் நிறுத்திவிட்டனர்.

எனவே, தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் தகுதியான கணினி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கும் நிதியை கணினி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற் றாவிட்டால் 70 ஆயிரம் கணினி ஆசிரியர் குடும்பங் கள் ஒட்டுமொத்தமாக சட்டப் பேரவைத் தேர்தலை புறக் கணிக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.