'பென்ஷன்' உயர்வு அறிவிப்போடு நிற்கிறது ‘டாப்ஸ்’ திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே இல்லை...
சம்பளம், பென்ஷன் உயர்வு அறிவிப்போடு நிற்கிறது ‘டாப்ஸ்’ திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே
தி.மு.க.,வின் 2021 தேர்தல் வாக்குறுதியான பழைய பென் ஷன் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஜாக்டோ - ஜியோ அழைப்பு விடுத்தது. இதையடுத்து, பங் களிப்பு பென்ஷன் திட்டத்தத்துக்கு (சிபிஎஸ்) பதி லாக பங்களிப்புடன் கூடிய உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டம் (டாப்ஸ்) அமல்படுத் தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 3ம் தேதி அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப் பட்டது.
இது திமுக தேர்தல் அறிக் கைக்கு முற்றிலும் மாறானது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் 1ல் அமல்படுத்திய ஒருங்கிணைந்த பென்ஷன் திட் டத்தை (யுபிஎஸ்) பெயர் மாற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவித் துள்ளதாக அரசு ஊழியர், ஆசி ரியர்கள் குற்றம்சாட்டி னர்.
அதேநேரம் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வருக்கு வரும் 8ம் தேதி மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு மேடை அமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். 'டாப்ஸ்' திட்டம் குறித்து முதல்வர் அறி வித்து நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், அந்த திட்டத்தை எவ்வாறு
செயல்படுத்துவது என்பது குறித்து இதுவரை விதிகள் வகுக்கவில்லை.
கடந்த மாதம் 10ம் தேதி வெளியிட்ட அரசாணையிலும், 'டாப்ஸ் திட்டத்துக்கான விரி வான விதிகள், தகுதி நிபந்த னைகள், செயல்பாட்டு வழி காட்டுதல்கள், செயல்படுத்தல் நடைமுறைகள் அரசால் தனித் தனியாக அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஒரு மாதம் ஆகியும் அது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை.
சம்பள உயர்வு எப்போது?
திமுக தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்த ரம் செய்யப்படுவார்கள் என்று இருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் 2022 முதல் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக 2024 ஜனவரி முதல் ரூ. 10 ஆயிரம் சம்பளம் ரூ. 12 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது. அதே நேரம் இந்த சம்பளம் ரூ. 10 ஆயிரம் எஸ்எஸ்ஏ கணக்கில் இருந்தும், ரூ. 2 ஆயிரத்து 800 இசிஎஸ் கணக்கில் இருந்தும் தனித்தனியாக தனித்தனி நாட் களில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் போராட் டத்தை கடந்த மாதம் தீவிரப் படுத்தினர். கண்ணன் என்ற ஓவிய ஆசிரியர் கடந்த மாதம்
14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதேநாளில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேச்சுவார்த்தை நடத்தி பகுதி நேர ஆசிரியர்களின் மாத சம்பளம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதிய ளித்தார். மே மாதம் சம்பனம் குறித்தும் அறிவிப்பு வெளியிட் டார். ஆனால், இதை செயல் படுத்துவது தொடர்பாக இது வரை வெளியிடவில்லை.
பென்ஷன் உயர்வு
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து ஓய்வு பெற்ற சத்துணவு பணி யாளர்களின் மாதந்திர பென்ஷன் ரூ.3 ஆயிரத்து 400 ஆக உயர்த் தப்படும். பணி நிறைவின்போது வழங்கப்படும் கிராஜுவிட்டி ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு உதவியாளர்கள் பெஸ் ஷன் ரூ. 3 ஆயிரத்து 200 ஆக உயர்த்தப்படும்.
பணி ஓய்வின்போது வழங் கப்படும் கிராஜுவிட்டி ஒரு லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபை யில் அறிவித்தார். அது தொடர் பாகவும் இதுவரை அரசாணை வெளியாகவில்லை.
இதற்கெல்லாம் அரசாசணை வருமா? அல்லது அறிவிப் போடு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள் ளனர்.
Wednesday, February 4, 2026
New
பென்ஷன்' உயர்வு அறிவிப்போடு நிற்கிறது - TAPS திட்டத்துக்கு இதுவரை விதிமுறை வகுக்கலே இல்லை...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.