முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கென தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளமை சான்றுகள் சரிபார்த்தல் மற்றும் online கலந்தாய்வு நடத்துதல்-ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் சார்பாக
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்,
02.2026
பொருள்
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் பணி EMIS நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கென தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளமை சான்றுகள் சரிபார்த்தல் மற்றும் online கலந்தாய்வு நடத்துதல் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் சார்பாக
பார்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியல்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24, 2024-25 ஆண்டுக்கான கலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட முதுகலை தாரி ஆசிரியர்கள் பட்டியல் 22.01.2026 அன்று இணையதளத்தில் யிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு EMIS இணைய தளம் வாயிலாக online மூலம் நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. எனவே, அதற்குத் தேவையான ஆயத்தப் களை கீழ்க்கண்டவாறு மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் டுக் கொள்ளப்படுகிறார்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட வாரியாக இத்துடன் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட அனைத்து பணி நாடுநர்களும் நேரடி நியமன கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தக்க வகையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இருந்து கலந்தாய்வு நாள் தெரிவிக்கப்பட்ட உடன் பணிநாடுநர்களுக்கு உடன் தகவல் அளிக்கத் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறது.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட User name/Password-ஐ பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் EMIS இணைய தளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். பாடவாரியான பணிநாடுநர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கணினி மற்றும் இணைய தள வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போல் ஏற்கெனவே பயிற்சி பெற்ற கணினி இயக்குபவர்களை நியமனம் செய்து கொள்ள வேண்டும்.
கணினி மற்றும் இணைய தள வசதி இல்லாத பட்சத்தில் அருகாமையில் வசதி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடத்தலாம். அவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலகம் அல்லாது வேறு இடத்தில் நடைபெறும் பட்சத்தில் பணிநாடுநர்களுக்கு எந்த இடத்தில் கலந்தாய்வு, எந்த நேரத்தில் நடைபெறவுள்ளது என்பதை தெளிவாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு ஆன்லைன் கலந்தாய்வு எந்த வகையில் நடத்தப்பட்டதோ அந்த நடைமுறையை கடைபிடித்து அதற்கு உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் (SSLC, HSC, Bachelors degree, Bed, Masters degree) தவிர கீழ்க்கண்ட சான்றுகளும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
Community certificate
PSTM certificate if applicable
Differently abled persons certificate if applicable
தேர்வு பணி நாடுநர்கள் அவர்கள் விரும்பும் காலிப்பணியிடத்தினை செய்தவுடன், அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பணிநியமன ஆணை நாடுநர்களுக்கு கலந்தாய்வு அன்று வழங்கக் கூடாது. பணி நியமன ஆணை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது.
தங்கள் மாவட்டத்தில் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணையினை ஐந்து நகல் எடுத்து Folder-ல் வைத்து வரிசையாக அடுக்கி பட்டியலுடன் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அறையில் ஒப்படைக்கும் வகையில் தனி நபர் மூலம் அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வு நடைபெறுவது சார்ந்து அனைத்து ஆயத்த பணிகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.