தனித் தேர்வர்களுக்கு (Private Candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 25, 2026

தனித் தேர்வர்களுக்கு (Private Candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!



தனித் தேர்வர்களுக்கு (Private Candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

அனுப்புநர்

திருமதி.க.சசிகலா, இயக்குநர்.

அரசுத்தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006.

5.5.6: 012354/01/2025

ஐயா/அம்மையீர்,

பொருள்:

பெறுநர்

1. இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி.

2.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை), அனைத்து மாவட்டங்கள்.

3. அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள். அனைத்து மாவட்டங்கள்.

बी: 24.02.2026

அரசுத் தேர்வுகள் இயக்ககம். சென்னை-6-மார்ச்/ஏப்ரல்-2026. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை ஆன்லைனில் நடத்துதல் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக, அறிவுரை வழங்குதல் பார்வை:

இவ்வலுவலக செய்தி குறிப்பு நாள். 24.02.2026

மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வுகளை 26.02.2026 முதல் 28.02.2026 வரை நடத்திட, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

மேற்படி தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை 26.02.2026 முதல் 28.02.2026 வரையிலான நாட்களில், தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே நடத்திடவும், அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கு தேர்வெழுத வரும் தனித்தேர்வர்களை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைக் கொண்டே செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கவேண்டும். மேலும். செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை 02.03.2026 அன்றுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

This document is an official notification from the Directorate of Government Examinations, Chennai, regarding the science practical examinations for private candidates appearing for the 10th-grade public examination in March/April 2026.

Examination Dates: Practical exams for science subjects are to be conducted between February 26, 2026, and February 28, 2026.

Venue: Private candidates must take their practical exams at the schools where they received their science practical training.

Requirements: Candidates must present their examination hall ticket to be admitted to the practical exam.

Submission Deadline: The practical exam mark lists must be submitted to the relevant District Assistant Director of Government Examinations office by March 2, 2026.

CLICK HERE TO DOWNLOAD DGE - SSLC Pvt Science Practical Instructions - PDF

CLICK HERE TO DOWNLOAD DGE - HSE Pvt Science Practical Instructions - PDF


தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE), மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள பிளஸ் 1 (+1) மற்றும் பிளஸ் 2 (+2) பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டுகளை (Hall Ticket) இன்று, பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் (Private Candidates) தங்களது ஹால்டிக்கெட்டைப் பின்வரும் முறையினைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்: ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முறை:

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள 'Hall Ticket' என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் 'HSE March 2026 - Private Candidate Hall Ticket Download' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளிடவும்.

விவரங்களைச் சமர்ப்பித்தவுடன் உங்கள் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும், அதனைப் பதிவிறக்கம் செய்து அச்சுப் பிரதி (Printout) எடுத்துக்கொள்ளவும்.

முக்கியத் தகவல்கள்:

பள்ளி மாணவர்கள்: வழக்கமான பள்ளி மாணவர்கள் (Regular Candidates) தங்களது ஹால்டிக்கெட்டுகளை அந்தந்தப் பள்ளிகள் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்வு தேதிகள்: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2 முதல் மார்ச் 26, 2026 வரை நடைபெற உள்ளன.

அறிவுறுத்தல்: தேர்வு அறைக்குச் செல்லும்போது ஹால்டிக்கெட்டின் அசல் நகல் அல்லது தெளிவான அச்சுப் பிரதியை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா வெளி யிட்ட அறிவிப்பு விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப் புக்கு மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (பிப்.23) மதியம் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து தனித் தேர்வர் கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக் கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத் தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, பள்ளி மாணவர் களுக்கான ஹால்டிக்கெட்களும் அவரவர் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.