தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள் - பள்ளிக் கல்வித் துறைக்கு ₹48,534 கோடி & உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி - Tamil Nadu Interim Budget 2026 - Key Announcements - ₹48,534 crore for School Education Department & Rs.8,505 crore for Higher Education Department
நெடுஞ்சாலை
நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு
தமிழக இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா
சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில் 30.79 கோடி சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையுடன் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ. 13,062 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்துக்கு ரூ. 1,722 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பணிகள்
19 முக்கிய கோயில்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்!
மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி
மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
மின்தேவை
மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது
போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு துறை
இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு! வீட்டு மனை பட்டா
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்
ரூ.374 கோடியில் நதிக்கரை மேம்பாடுத் திட்டம் காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.
துறை வாரியாக
இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம்
2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.
2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை
தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு! மகத்தான சாதனை
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.
6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.
பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை
888 முறை பயணம்
மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.
ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
பட்ஜெட் தாக்கல்
பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்புகளையும் பூா்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், சிறு வணிகா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக்கூடும்.
இடைக்கால பட்ஜெட் ஏன்?
ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
தோ்தல் ஆண்டு என்பதால் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.