THIRAN - இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக - DEE & DSE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 23, 2026

THIRAN - இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக - DEE & DSE Proceedings



THIRAN ASSESMENT JAN 26!!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை

பொருள்:

செயல்முறைகள், சென்னை-6

ந.க.எண்.9111/எப்1/2025 நாள் : 23.01.2026

பள்ளிக் கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் - 01. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN - Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - தொடர்பாக.

பார்வை: 1. 2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு எண் :01 2. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணை 3. 4. 5. செயல்முறைகள், 03.07.2025. ந.க.எண். 09111 /கே2/ 2025, நாள்.

மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அனைத்து துறை இயக்குனர்களுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் கூட்ட குறிப்பு, நாள்: 27.10.2025

சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண். 09111 /கே2/ 2025, நாள். 04.11.2025. மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அனைத்து துறை இயக்குனர்களுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் கூட்ட குறிப்பு, நாள்: 21.01.2026

**********

2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN - Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கம் ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பார்வை(4)ல் காணும் செயல்முறைகளின்படி, அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் அடிப்படை கற்றல் விளைவினை அடையும் பொருட்டு, அரையாண்டு தேர்வு வரை THIRAN பயிற்சிப் புத்தகத்தின் முதல் பகுதி அடிப்படைக் கற்றல் விளைவுகள் பகுதி கற்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் தேர்வில் 68% மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்னமும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் முழுஆண்டுத் தேர்வு வரை THIRAN பயிற்சி புத்தகம் கொண்டு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். மற்றும் இதனை சார்ந்து பின்வரும் வழிமுறைகளை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, நடைமுறைப்படுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவறுத்தப்படுகிறார்கள்.

1. பாட வாரியாக "அடிப்படை கற்றல் விளைவு(BLO - Basic Learning Outcome)" அடைந்த மாணவர்கள் வழக்கமான வகுப்பு நிலை பாடங்களை தொடரலாம். ஆனாலும், அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் "THIRAN" மாதாந்திர மதிப்பீட்டில் பங்கு பெற வேண்டும்.

2. ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர தேர்வு, 28.01.2026 முதல் 30.01.2026 வரை வழக்கமான நடைமுறையின்படி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு நடத்தப்படும்.

3. இதற்கான மதிப்பெண் உள்ளீடு பணியை 31.01.2026 முதல் 07.02.2026 வரை மேற்கொள்ளலாம்.

4. பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர தேர்வு, 25.02.2026 முதல் 27.02.2026 வரை வழக்கமான நடைமுறையின்படி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு நடத்தப்படும். 5. இதற்கான மதிப்பெண் உள்ளீடு பணியை 28.02.2026 முதல் 07.03.2026 வரை மேற்கொள்ளலாம்.

6. அரையாண்டுத்தேர்வினைப் போன்று, முழுஆண்டுத்தேர்விற்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு- THIRAN பயிற்சி புத்தகம் சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.

7. அரையாண்டுத்தேர்வினைப் போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான, பொதுவான BLO கேள்விகளாக இருக்கும். 8. முழுஆண்டுத் தேர்வு மதிப்பெண்கள் "THIRAN" இயக்கத்தின் Endline தேர்வு மதிப்பெண்களாக கருதப்படும்.

9. இந்த கல்வியாண்டில் "THIRAN" பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் "Minimum Learning Material" அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும்.

10. இந்த கல்வியாண்டில் "THIRAN" பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பு நிலை பாடங்களுக்கு தயாராகும் பொருட்டு அடுத்த கல்வியாண்டின் முதல் மாதம் "Bridge Course" ஆக நடத்தப்படும்.

தொடக்கக் கல்வி இயக்குநர்

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.