'போலி' சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் - விசாரணை நடப்பதாக CEO விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 30, 2026

'போலி' சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் - விசாரணை நடப்பதாக CEO விளக்கம்

'போலி' சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் - விசாரணை நடப்பதாக CEO விளக்கம் 27 people became teachers by submitting 'fake' certificates - the CEO explains that an investigation is underway.

reports a complaint that 27 individuals in the Dharmapuri district allegedly secured teaching positions using fake leprosy disability certificates. These appointments, made between 2003 and 2007 based on a 1989 government priority scheme for those with over 40% permanent disability from leprosy, are now under investigation by the Dharmapuri CEO.

Essential information:

Allegation: 27 people became teachers using fraudulent leprosy disability certificates.

Timeframe: The appointments occurred between 2003 and 2007.

Violation: The individuals allegedly failed to maintain required medical verification records in their service books.

Status: Social activists have demanded action, and the Dharmapuri CEO has stated an inquiry is underway.

'போலி' தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர்

தர்மபுரி, ஜன. 30

தர்மபுரி மாவட்டத்தில், போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி, 27 பேர் ஆசிரியர் பணியில் சேர்த் துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு கட கடந்த, 1989ம் ஆண்டில், தொழுநோய் பாதித்து, 40 சதவீதத்திற்கு மேல் நிரந்தர ஊனம் உள்ளவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை வழங் கியது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தி ருந்த பலர், அரசு பணிகளில் சேர்ந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில், 27 பேர் போலியாக, தொழுநோய் ஊன மருத்துவ சான்றிதழ் வழங்கி, ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதா கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதா வது:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்சி முடித்த, 42 பேர், கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு விசாரணை நடப்பதாக தர்மபுரி சி.இ.ஒ., விளக்கம்

அலுவலகத்தில் தொழுநோய் மனை சான்றிதழ் முன்னுரிமை பிரிவில், பதிவு செய்திருந்தனர். அவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்ட வர்கள் என்ற முன்னுரிமை அடிப்ப டையில், போலியாக, தொழுநோய் ஊன மருத்துவச்சான்றிதழ் வழங்கி கடந்த, 2003 முதல், 2007ம் ஆண்டு வரை, ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது, காரி மங்கலம், அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, மொரப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய ஒன்றியங் களில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பராமரிக்காத சான்றிதழ்

தொழுநோய் மருக் துவ சான்றிதழ் பெற்று, ஆசி ரியர் பணியில் சேர்ந்தவர்கள், அவர்களின் பணியாணை நிபந்த னையின் படி, பணியில் சேரும் முன், கிருஷ்ணகிரி வேலை வாய்ப்பு அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவக் குழுவிடம் இருந்து, அவர்களின், 40 சதவீத தொழுநோய் ஊனம் உறுதி செய்தும், அந்த வானம் ஆசி ரியர் பணியை செய்ய தடையாக இல்லை என்றும், உடல் நிலை தகுதி சான்றிதழ் பெற்று, வட்டார கல்வி அலுவலகத்தில் கொடுத்தி ருக்க வேண்டும். அதை சம்மந்தம் பணி பதிவேட்டில் வைத்து பத்தி பட்ட வட்டார கல்வி அலுவலக ரமாக பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

ஆனால், மேற்கண்ட, 27 ஆசி ரியர்களின் தொழுநோய் ஊனச் சான்றிதழ்கள் அவர்களின் பணி புத் தகங்களில் இன்று வரை பராமரிக் கப்படவில்லை.

நிபந்தனை மீறல்

மாறாக, மருத்துவ குழுவால் வழங்கப்படாத மற்றும் பணி பதி வேட்டில் பராமரிக்கப்படாத, அந்த மருத்துவ சான்றிதழ், உண்மை தன்மை வாய்ந்தது என, போலி விசாரணை அறிக்கையை கடந்த, 2007 அக்., மாதம் பெற்று, சம் செய்யப்பட்டுள்ளது. மந்தப்பட்ட ஆசிரியர்களின் பணி புத்தகத்தில் கடந்த, 2023ல் பதிவு

தொழுநோய் பாதித்து, 40 சதவி தத்திற்கு மேல், நிரந்தர ஊனம் உள் எவர்கள் மட்டுமே, அரசு பணியில் முன்னுரிமை பெற இயலும். ஆனால், தற்போது ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு. இது போன்ற ஊனங்கள் எதுவும் இல்லை என, தெரியவந்துள்ளது.


ஊனச்சான்றிதழ் இல்லை

மேற்படி, 27 ஆசிரியர்கள் நல்ல உடல்நிலையில் உள்ளார்கள் என்ற மருத்துவ சான்றிதழ் பணி பதி வேட்டில் பராமரிக்கப்படுகிறது. ஆனால், வேலைவாய்ப்பு அலு வலகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவ குழுவிடம் பெற்ற ளனச் சான்றிதழ், எந்த ஆசிரியரின் பணி பதிவேட்டிலும் பராமரிக்கப்பட வில்லை. அதேபோல் ஒவ்வொரு நபரின் உடலில், தொழுநோயால் என்னென்ன நிரந்தர மானம் கண் டறியப்பட்டது என்ற விபரமும் பணி பதிவேட்டில் இல்லை.

சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகங்களிலுள்ள ஆவணங் சுளிலும் இல்லை. எனவே, தொழுநோய் முன்னுரிமை பிரிவில், வேலைவாய்ப்பு அலூ வலகம் பரிந்துரைப்படி, இடை நிலை ஆசிரியர் வேலையில் சேர்ந்த, 27 பேரின் தொழுநோய் ஊன மருத்துவ சான்றிதழ் குறித்து, மருத்துவக்குழு மூலம் விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் ஜோதி சந்திரா கூறுகையில், "போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி, ஆசிரியர் பணியில் சேர்ந் தது குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம். அது குறித்த அறிக்கை வந்தவுடன், அரசுக்கு அனுப்பி விடுவோம்." என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.