PGTRB நேரடி நியமனம் - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (HS) உத்தரவு
Joint Director (Higher Secondary Education) instructs all District Chief Education Officers to upload details of vacant Post Graduate Teacher, Physical Education Director Level-1, and Computer Instructor Level-1 positions to the EMIS website by January 31, 2026. This is in preparation for direct recruitment following the provisional selection list published by the Teachers Recruitment Board on January 22, 2026.
Action Required: Upload details of vacant positions to the EMIS website.
Deadline: By January 31, 2026.
Positions: PG Teacher, Physical Education Director L-1, Computer Instructor L-1.
Consequence: District Chief Education Officers are responsible for any missed vacancies.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள், சென்னை-06.
ந.க.எண்.034110/டபிள்யு3/இ3/2024, நாள்.28.01.2026
பொருள் :
பள்ளிக்கல்வி மேல்நிலைக்கல்விப்பணி பள்ளிகளில் அரசு/முதுகலை நகராட்சி/மேல்நிலைப் ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களில் 31.01.2026 அன்றைய நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல் -தொடர்பாக.
பார்வை
சென்னை -06 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 22,01,2026 நாளிட்ட தற்காலிக தெரிவுப்பட்டியல்.
2023- 2024 முதல் 2024-2025 ஆம் கல்வியாண்டுகளுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 22.01.2026 அன்று தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமனம் வழங்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு/நகராட்சி/மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலவரப்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் 31.01,2026க்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிட விவரங்கள் எதுவும் விடுபடாமல் பதிவேற்றம் செய்திடுமாறும், காலிப்பணியிடங்கள் விடுபட்டிருந்தது பின்னர் அறிய நேர்ந்தால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) (பொ)
பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
Friday, January 30, 2026
New
PGTRB நேரடி நியமனம் - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (HS) உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.