இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 31, 2026

இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஸ்

"போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்புக" - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் - இடைநிலை ஆசிரியர்களது ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

"போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்புக"

“விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்பட இருக்கின்றது; அதனடிப்படையில் இடைநிலை |ஆசிரியர்களின் ஊதியப்பிரச்னைக்கு முடிவு எடுக்கப்படும்; போராட்டக்களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபடுமாறுக் கேட்டுக் கொள்கின்றேன்”

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

*மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிக்கை

விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்பட இருக்கின்றது.

அதனடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களது ஊதியப்பிரச்சினை சார்ந்த முடிவு எடுக்கப் படும். போராட்டக்களத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபடக் கேட்டுக் கொள்கின்றேன்.

இது நம்முடைய அரசு என முதல்வரின் மீது நம்பிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபடாமல் மாணவர்களது கற்றல் பாதிக்கப்படாமல் பள்ளிக்குத் தொடர்ந்து சென்று கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

மொத்தமுள்ள இடைநிலை ஆசிரியர்களில் பள்ளிப்பணிகளுக்கு செல்லாமல் இருக்கின்ற 5781 ஆசிரியர்களையும் கற்பித்தல் பணிக்கு திரும்ப கேட்டுக் கொள்கின்றேன்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.