பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - For the role of a scribe in public examinations, college students or volunteers from the 'Education at Doorstep' program can be appointed - Order from the Director of Government Examinations!
பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பார்வைச் சவால் கொண்ட மாணவர்கள் சொல்வதை எழுதுபவராக Scriber பணிக்கு ஆசிரியர் பட்டயச் சான்றிதழ், ஆசிரியர் பட்டச் சான்றிதழ், தொழிற்கல்வி, கலை அறிவியல் பட்டம் படிக்கும் 2ம் ஆண்டு மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்திக் கொள்ளளாம்
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களையும் சொல்வதை எழுதுவோராக நியமனம் செய்யலாம்
அனுப்புநர்
திருமதி.க.சசிகலா, அரசுத் தேர்வுகள் இயக்குநர். அரசுத் தேர்வுகள் இயக்ககம். சென்னை-600 006. பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர். முதன்மைக் கல்வி அலுவலகம், அனைத்து மாவட்டங்கள்.
5.5.6. 213460/01/2024
நாள்: 23.01.2026
பொருள்:
சென்னை -6. அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச்/ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் நடைபெறவிருக்கும் திருப்புதல் தேர்விற்கு. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்தல் - தொடக்கக் கல்வி (Diploma in Elementary Education) /ஆசிரியர் கல்வி பட்டச் சான்று (B.Ed..) / தொழிற் கல்வி, கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாமாண்டு பயிலும் தன்னார்வல கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களைப் பயன்படுத்துதல் - சார்பு.
பார்வை:
1. சென்னை-9 தலைமைச் செயலக பள்ளிக் கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் 7300/1.5/2025-1 . 14.11.2025 கடித எண்.
2. அரசுத் தேர்வுகள் தலைமையில் இணை இயக்குநர் அமைக்கப்பட்ட அறிக்கை நாள்: 08.12.2025. (மேல்நிலை) குழுவின்
an official circular from the Directorate of Government Examinations in Chennai regarding the appointment of scribes for students with disabilities for the March/April 2026 public and revision exams.
Sender: Mrs. K. Sasikala, Director of Government Examinations, Chennai-600 006.
Recipients: Chief Educational Officers of all districts.
Subject: Utilization of D.El.Ed. / B.Ed. qualified individuals, second-year college student volunteers, and Illam Thedi Kalvi volunteers as scribes.
Date of Issue: January 23, 2026. - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை
1) தங்கள் மாவட்டத்திலுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் (Diploma in Elementary Education) / ஆசிரியர் கல்வி பட்டச் சான்று (B.Ed.) /பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி முதல்வர்களைத் தொடர்பு கொண்டு சொல்வதை எழுதுபவர் பணிக்கு தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ள இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை கோரிப் பெற வேண்டும்.
2) மேற்காண் பட்டியலைப் பெற்றபின், அவர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் சொல்வதை எழுதுபவர்களுக்கான பணிகள் சார்பான பயிற்சி அளிக்க வேண்டும்.
3) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற தன்னார்வல கல்லூரி மாணவர்களையே நடைபெறவிருக்கும் பொதுத்தேர்விற்கு சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்க வேண்டும்.
4) மார்ச்/ஏப்ரல் 2026, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முன் தற்போது நடைபெறவுள்ள திருப்புதல் தேர்விற்கும் மேற்காண் பயிற்சி பெற்ற தன்னார்வல கல்லூரி மாணவர்களையே சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களுக்கான பணிகள் பற்றி பயிற்சி பெற ஏதுவாக அமையும்.
5) திருப்புதல் தேர்விற்கு சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட்ட தன்னார்வல கல்லூரி மாணவர்களை எக்காரணம் கொண்டும் வரும் பொதுத்தேர்விற்கு அதே தேர்வருக்கு மீண்டும் சொல்வதை எழுதுபவராக நியமிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற வேறு தன்னார்வல கல்லூரி மாணவர்களையே சொல்வதை எழுதுபவராக நியமிக்க வேண்டும்.
6) புறவுலகச் சிந்தனை குறைபாடு (Autism) உள்ள மாணவர்களுக்கு Special B.Ed.. பயிலும் மாணவர்கள் அல்லது சிறப்பு பயிற்றுநர்களை சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
7) இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களையும் சொல்வதை எழுதுபவர்களாக நியமனம் செய்யலாம்
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD DGE - Appointment of Scribe Letter PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.