a press release from the Action Committee of Teachers Organisations and Government Employees Organisations (ACTO-GEO), announcing a press conference regarding a proposed indefinite strike starting February 3, 2026.
Organisation: Action Committee of Teachers Organisations and Government Employees Organisations (ACTO-GEO).
Purpose: To announce an indefinite strike over a 20-point charter of demands, including the cancellation of the CPS scheme and regularisation of employment for various teachers.
Press Conference Date/Time: January 30, 2026 (Friday) at 3:30 PM.
Location: Chennai Press Club
*ACTO - GEO பத்திரிகை செய்தி :*
*தேர்தல் வாக்குறுதி எண் 311 ன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.*
*உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 03.02.2026 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு..*
ACTO-G E 0 ஆக்டோ - ஜியோ
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு
எண்.3(G-1), கிருஷ்ணப்ப தெரு, சேப்பாக்கம், சென்னை 600 005.
Action Committee of Teachers Organisations and Government Employees Organisations
:29.01.2026
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
பத்திரிக்கை/ஊடகம்.
சென்னை.
அன்புடையீர், வணக்கம்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு களைய தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதி எண் : 309 ன் படி CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துக. பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி எண.311-ன்படி சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி எண்: 311-ன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி ஊதிய முரண்பாடுகளைக் வேண்டும். வாக்குறுதி எண்.181-பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 50 ஆயிரம் ஆசிரியர்களின் 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். TET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 03.02.2026(செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்குச் செல்வது என முடிவெடுத்துள்ளோம்.
இப்பொருள் தொடர்பாக வரும் 30.01.2026(வெள்ளி) அன்று பிற்பகல் 03.30 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளோம். செய்தி சேகரிப்பதற்காக தங்களது நாளிதழ்/ஊடகத்திலிருந்து செய்தி சேகரிப்பாளரையும், புகைப்படக் கலைஞர், ஒளிப்பதிவாளரையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்மதிப்புகளுடன்
இரா.பாலசுப்ரமணியன்)
மாநில தலைமை அமைப்பாளர்
(பா.ஆரோக்கியதாஸ்)
மாநில இணை அமைப்பாளர்கள்
(மு.இந்திரா)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.