டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான விடைத் தாள்கள்: தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான விடைத் தாள்களை, தேர் வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள் ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அண் மையில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான ஓ.எம்.ஆர்., மற்றும் சி.பி.டி., விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்கள் தேவைப் படும் தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவு எண் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-6) பதவிக்கான தேர்வின் ஓ.எம்.ஆர்., விடைத் தாள்களை 2026 நவ. 17 வரை, சி.பி.டி., விடைத் தாள்களை வரும் டிச.17 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நி லைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான தேர்வின் விடைத் தாள்களை 2026 நவ. 18 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1 பணி சுள்) பதவிக்கான தேர்வுக்குரிய விடைத் தாள்களை 2026 நவ. 18 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2, 2ஏ (நேர்முகத் தேர்வு மற்றும் நேர்மு கத் தேர்வு அல்லாத பதவிகள்) பதவிகளுக்குரிய முதல்நிலைத் தேர் வின் விடைத் தாள்களை 2026 நவ. 19 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் You can download TNPSC answer sheets.
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குருப்-1 முதல்நிலைத் தேர்வுவிடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அந்த விடைத்தாள்களை பெற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.