TRUST Examination - நவம்பர் 2025 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 22, 2025

TRUST Examination - நவம்பர் 2025 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு.



TRUST Examination - நவம்பர் 2025 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு. TRUST Examination - November 2025 - Examination Center Name List and Examination Hall Admit Card Released.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) நவம்பர் 2025 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு.

சென்னை -600 006.

5.5. 014998/9(4)/2025

ஐயா/அம்மையீர்,

क्रम:22.112025

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) நவம்பர் 2025 -தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல்-தொடர்பாக.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 29.11.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் (Nominal Roll Cum Attendance Sheet) தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியின் USER ID / PASSWORD பயன்படுத்தி 24.11.2025 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர்ப் பட்டியலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 24.11.2025 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் USER ID / PASSWORD ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை தெரிவிக்கவும் அம்மாணவர்களுக்கு தெளிவாகத் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

CLICK HERE TO DOWNLOAD தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.