நவம்பர் 2025 மாத சிறார் திரைப்படம் காக்கா முட்டை திரையிடுதல் - DSE செயல்முறைகள்!
பார்வை:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600006
நக.எண்.034785/எம் / இ12025, நாள். 25/11/2025
பள்ளிக்கல்வி கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 நவம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண். 034785 /எம்/இ1/2025,நாள் :14/10/2025. உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும். மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள்
பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும் .
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல். தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.
மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும். கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு. இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் நவம்பர் மாதம் “காக்கா முட்டை." திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. படத்தின் கதைக் கரு. சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது. திரையிடலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
1 திரையிடுவதற்கு முன் இணைப்பு:1 இல் இணைக்கப்பட்டுள்ள படத்தின் புகைப்படத்தை திரைப்படம் திரையிடப்பட உள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
திரையிடலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கு அப்பள்ளியைச் சார்ந்த SMC முன்னாள் மாணவ உறுப்பினர்களில் ஒருவரைத் தலைமை ஆசிரியருடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஒருங்கிணைத்தலுக்கான SMC முன்னாள் மாணவ உறுப்பினர் பொறுப்பு ஆசிரியர் வழிகாட்டுதலின் படி திரையிடப்படவிருக்கும் படத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வர்.
பொறுப்பு ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான பொறுப்பாளர்கள் திரையிடலுக்கு முன்பே படத்தைப் பார்த்து, படத்தின் கருப்பொருள், அதன் முக்கியத்துவம் போன்றவற்றை உணர்ந்து திரையிடலுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திரையிடப்படவிருக்கும் படம் மற்றும் முன்னோட்ட காணொளியை திரையிட்டு பார்த்து அதன் திரையிடும் தரத்தை உறுதிப்படுத்திட வேண்டும். திரையிடலுக்குத் தேவையான அறை மற்றும் கருவிகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
திரையிடப்படும் அறை, திரையிடலுக்கு ஏதுவான ஒளி, ஒலி குறைவான, அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
திரையிடப்படும் அறை காற்றோட்டமான, சுகாதாரமான, பாதுகாப்பான இடமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* படம் பார்க்கும் மாணவர்களுக்குப் போதுமான இருக்கை, குடிநீர்.கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
2 திரையிடலின் போது பொறுப்பு ஆசிரியர் மற்றும் SMC உறுப்பினர் திரையிடலுக்கு முன்பு படத்தின் கரு, அதன் பின்னணி, அதைத் திரையிடுவதற்கான காரணம் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
படத்தை திரையிடும் முன் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் திரையிடப்படும் படம் தமிழ் அல்லாத பிறமொழியாக இருக்கும் பிறமொழியாக இருக்கும் வேளையில் அந்தப்படத்திற்கு நேரடி மற்றும் சுருக்கமான மொழிபெயர்ப்பைத் தலைமை ஆசிரியரோ,ஆசிரியரோ, பள்ளி மேலாண்மைக் குழுவிலுள்ள முன்னாள் மாணவரோ அல்லது பொது முன்னாள் மாணவரோ அல்லது எல்லோரும் இணைந்தோ செய்ய வேண்டும்.
திரையிடப்படும் படத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பிற செய்திகளை எழுத்து வடிவில் வரும்போது அதை முழுமையாகப் பார்க்கும்படி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாகப் படம் முழுமையாக முடியும் வரை விளக்குகளை அணைத்தே வைத்திருக்கவேண்டும். 3. திரையிட்ட பின் * படத்தின் கதைக்கரு நேரம் கொடுக்கப்பட வேண்டும். மற்றும் விவாதிக்க படத்திலிருந்து பெறப்பட்ட மாணவர்களுக்கு உரிய அனுபவத்தைப் பற்றிக் கலந்தாலோசித்து படம் சார்ந்து இணைப்பில் பகிரப்பட்ட கலந்துரையாடலுக்கான தலைப்புகள் அல்லது கேள்விகள் மாணவர்களிடம் பகிரப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். திரையிடலை ஒருங்கிணைக்கும் ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று விளக்கங்களை. மாணவர்கள் கவனிக்கத் தவறிய கூறுகளை பகிரலாம்.
* கலந்துரையாடலுக்கு உரிய முக்கியத்துவமும், போதுமான நேரமும் வழங்கப்பட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள link ல் நவம்பர் மாதம் திரையிடப்படும் "காக்கா முட்டை" திரைப்படம் மற்றும் படத்திற்கான முன்னோட்ட காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
QR Code Drive Link https://drive.google.com/file/d/1um8yaby K6BgajS-R60xPIXYqzzPWeZSU/view?usp=drive_link
இணைப்பு :
1. படத்தின் புகைப்படம்
2. படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்
உரையாடலுக்கான கேள்விகள்
4. திரையிடலுக்கான நிரல்
க . 2015 பள்ளிக் கல்வி இயக்குநகுக்காக
பெறுநர்:
25/1/2 முதன்மைக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலகம், அனைத்து மாவட்டங்கள் நகல்:
2 அரசு முதன்மைச்செயலர், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009
2 உறுப்பினர் செயலர், மாதிரிப் பள்ளிகள், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், Quairemast - 600 006
மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் சென்னை - 600006
4. இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்குநரகம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம். சென்னை-600006 இணைப்பு 1. '
படத்தின் பெயர்: 'காக்கா முட்டை*
wunderbar films (p) itd... Dhanush & Vetri Maaran present தாக்கா முட்டை Manikandan m V Prakashkumar grass root film company
இணைப்பு 2
படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்
படம் வெளியான ஆண்டு: 2014
இயக்கம் : திரு. மணிகண்டன்
காக்கா முட்டை
சென்னையின் குடிசைவாழ்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றிய படம் 'காக்கா முட்டை : மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் முட்டைகளை அண்ணன் தம்பிகளான இந்த சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவதால் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்கள். கூட்ஸ் ரயிலில் இருந்து கீழே விழும் நிலக்கரியை எடுத்து விற்று அதில் வரும் வருவாயை அம்மாவுக்குக் கொடுக்கின்றனர். இது போக கிடைக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
அவர்கள் வாழும் பகுதிக்கு அருகில் ஒரு புதிய பீட்சா கடைத் திறக்கப்படுகிறது. பீட்சா என்பது புதிய உணவுப்பொருள் என்பதாலும், பார்ப்பதற்கு வண்ணமயமாய் இருப்பதாலும் சாப்பிடும் ஆசை இந்தச் சகோதரர்களுக்கு ஏற்படுகிறது. கடைக்கு உள்ளே கூட இவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த சகோதரர்களுக்கு எப்படியேனும் கடைக்குள் சென்று பிட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வருகிறது. அதன் விலை 300 ரூபாய் என்று தெரிய வந்ததும் அம்மாவுக்குத் தெரியாமல் பணத்தை சேமிக்கின்றனர். பணம் சேர்த்தும் அவர்களால் பிட்சா கடைக்குள் நுழையமுடியவில்லை. அதையும் மீறி அவர்கள் உள்ளே செல்ல முயல, அங்கு அவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. பீட்சா கடையில் நடந்தது அம்மாவுக்குத் தெரியவேண்டாம் என்று நினைக்கின்றனர். அதையும் மீறி எல்லோருக்கும் தெரிய வர, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
பீட்சா சாப்பிட வேண்டும் என்று ஆசையுள்ள இரண்டு குழந்தைகளை மையமாகக் கொண்டு தொடங்கும் இந்தப் படம், குழந்தைகளின் இயல்பான உலகம், ஆசைகள், விடாமுயற்சி, சகோதரத்துவம், மற்றும் நகரங்களின் வாழ்க்கை நிலைகளின் வித்தியாசங்களையும், நுகர்வு கலாசாரம் எவ்வாறு நம் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் வடிவமைக்கிறது என்பதையும் ஆழமாக பேசுகிறது.
நகரத்தின் புறநிலைப் பகுதிகளில் உழைத்து வாழும் குடும்பங்களின் தினசரி போராட்டங்களையும், அவர்கள் வாழ்க்கையின் எளிமை மற்றும் அழகையும் குழந்தைகளை வைத்து நுணுக்கமாக காட்டியதற்காக பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது இந்தப் படம்.
இணைப்பு 3: அனைத்து குழந்தைகளும் கலந்துரையாடுவதற்கான செயல்பாடுகள்:
1. வரைதல் மற்றும் பாடல் எழுதுதல்
மாணவர்கள் தங்கள் கனவு / ஆசைகளைப் படமாக வரைதல். அந்த ஆசை ஏன் முக்கியம்? அதை எப்படிச் சாதிக்கலாம்? என்பதை குழுவிடம் பகிர்தல்.
• குழுவாகப் பிரிந்து கலந்துரையாடி காகத்தைப் பற்றி ஒரு பாடலை எழுதி, மெட்டமைத்துக் குழுவாகப் பாடுதல்.
2. கலந்துரையாடல்
• திரைப்படத்தில் மிகவும் பிடித்த காட்சி, அதற்கான காரணம்.
• பிடிக்காக காட்சி, அதற்கான காரணம் ஆகியற்றை வகுப்பில் பகிர்தல்.
3. நேர்காணலுக்கான வினாக்களைத் தயாரித்தல் • படத்தில் இடம்பெற்ற ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை பேட்டி எடுக்க வினாக்களைத் தயார் செய்தல்.
4. அனுபவபகிர்வு
ஏழை, பணக்காரன் என்பவை போல சமூகத்தில் மாணவர்கள் பார்க்கும் பாகுபாடுகள், அவற்றைப் போக்கும் வழிமுறைகள் குறித்துச் சிறு குழுக்களாகக் கலந்துரையாடுதல்.
• குழுக்களின் முடிவுகளைப் பிறரிடம் பகிர்தல்.
• தங்களை ஈர்க்கும் விளம்பரங்கள் என்ன? ஈர்க்கும் காரணிகளை கண்டறிந்து அதை குறித்த விமர்சனங்களை பகிர்தல் குறிப்பு:
•திரைப்படம் பற்றிய மாணவர்களின் கலந்துரையாடல் குறிப்புகள், பகிர்வுகளை நேர்காணலுக்கான வினாக்கள் மற்றும் அனுபவ alumni@tnschools.gov.in மின்னஞ்சல் வாயிலாக மாநிலத்திற்கு பகிறலாம்.
• சிறந்த ஓவியங்களை, தேன்சிட்டு இதழுக்கு thenchittu@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் (அ) கீழ்கண்ட முகவரிக்கு நேரடியாகவும் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் அனுப்பலாம். (முகவரி : 8 வது தளம், ஈ.வெ.கி சம்பத் மாளிகை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை,
QUE GOT GO OUT - 600006) சென்னை ணைப்பு 4. திரையிடலுக்கான நிரல்:
செயல்படுகள்
எண்
திரைப்படத்தின் பிரதியை திரையிட்டுப் பார்த்து அதன் திரையிடும் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
படம் திரையிடுவதற்கான காற்றோட்டமான அறை, TN 2 தண்ணீர் என அனைத்தையும் சரி பார்த்தல்
3
நடத்தக்கூடியவர் உறுதிசெய்பவர் பொறுப்பு ஆசிரியர் SMC உறுப்பினர் திரைப்படம் திரையிடப்படும் அறையில் அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன் குழந்தைகளையும் கூட்ட வேண்டும்
படத்தின் அறிமுகத்தை மாணவர்களிடம் பகிர்தல் (கதை மற்றும் கருவைப் பகிர்தலை தவிர்க்கவும்)
பொறுப்பு ஆசிரியர்
தலைமை ஆசிரியர் /பொறுப்பு ஆசிரியர் 5
படம் திரையிடல் 6
துரையாடுவதற்கான செயல்பாடுகள் (மாநிலத்திலிருந்து பகிரப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் கலந்துரையாட ஊக்குவித்தல் )
7 பாராட்டுக்களும் நன்றி உரையும் பொறுப்பு ஆசிரியர்
பொறுப்பு ஆசிரியர்
பொறுப்பு ஆசிரியர் அல்லது
தலைமையாசிரியர்
DSE - November Month 2025 Movie Screening Instructions - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.