தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 15, 2025

தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!



பட்டாசு வெடிக்கும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் - DSE procedures regarding taking safety precautions to prevent fire accidents during the Diwali festival!

தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!

DSE - Deepavali Celebrations Proceedings - Download here பட்டாசு வெடிக்கும்போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை தீபாவளி பண்டிகையானது வரவிருக்கும் 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் அறிவுறுத்தல்வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,பட்டாசுகள் கொளுத்துமிடத்துக்கு அருகாமையில் வாளியில் தண்ணீர் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக் கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மூடிய பெட்டிகள், பாட்டில்களில் வேண்டாம்.



பட்டாசுகளை கூட்டமான பகுதிகள், தெருக்கள் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்போ, அருகிலோ வெடிக்காதீர்கள்.

பெட்ரோல் சேமித்துவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக் வயதானவர்கள் இருக்கும் கூடாது. குழந்தைகள், இடங்களில் பட்டாசுகளை வெடிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.