ஹெச்.எம்., - ஆசிரியை மீது நடவடிக்கைக்கு எதிராக மாணவ, மாணவியர் போர்க்கொடி H.M. - Students raise flag against action against teacher
சேலம், ஏற்காடு அடிவாரம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள செவித்திறன் குறையுடை யோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாண வியர், நேற்று பெற்றோர்களுடன் - வந்து, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
பள்ளியில் தற்போது, மாணவ, மாணவியர் படித்து வரு கிறோம். அனுமதிக்கப்பட்ட 14 ஆசிரியர் பணியிடத்தில், பேர் மட் டுமே இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்த ஜெபஸ்டின் ராஜா, தஞ்சைக்கு
இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது மனைவியான ஆசிரியை மேரிபுஷ்பா, 'சஸ்பெண்ட்' செய் யப்பட்டார். பள்ளி மேலாண்மை குழுவினர் இடையே நிலவும் ஈகோ காரணமாக, பொய்புகாரில் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளதால், ஆசிரியர் எண் ணிக்கை, 3 ஆக குறைந்துவிட்டது. அடுத்த வாரம். 2025 26 53 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியி டப்படும் நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையால், எங்களின் கல் வித்தரம் பாதிக்கும் சூழல் உரு வாகி உள்ளது. எனவே, ஆதா ரமற்ற குற்றச்சாட்டின் பேரில்
நடவடிக் மேற்கொள்ளப்பட்ட கையை ரத்து செய்து, தலைமை ஆசிரியரை மீண்டும் இதே பள் ளிக்கு இடமாற்றம் செய்வதுடன், சஸ்பெண்ட் ஆசிரியரை உடனடி யாக பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
பள்ளி மேலாண்குழு துணைத் தலைவி பூங்கொடி கூறுகையில், "நான் யாருக்கும் புகார் அனுப்ப வில்லை. என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி இருப்பதாக, விசாரணையின் போது தெளிவுப் படுத்தி இருப்பதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய தட வடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.