TNPSC Group 4 - சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 1, 2025

TNPSC Group 4 - சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு!



TNPSC Group 4 - சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 01/2024 , நாள் : 30.012024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV ( தொகுதி -IV பணிகள் ) உள்ள வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில் , சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே , இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 30.08.2025 முதல் 05.09.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே , அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் ( OTR ) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் . அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் ( claim ) / விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.