STET - சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம்.
சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அனுமதிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம்.
சிறப்பு தகுதித் தேர்வு முடிந்த பின்னர் தான் பதவி உயர்வு வழங்க முடியும் என தகவல்.
சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக கருத்து கேட்பு கூட்டம்!!!
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி நான்காவது கூட்டம் 11.09.2025 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 04.09.2025 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 11.09.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏழு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரு பிரதிநிதிகளுக்கு மிகாமல் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.