அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 21, 2025

அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



அனுமதிக்கப்பட்ட பாடத்தை தவிர பிற பாடங்களில் உயர் கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்த விவரங்களை சமர்பிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது .

உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையினை 05.2025 - க்குள் சமர்பிக்க கோரல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6 ந.க.எண்.028490/இ1/2024. நாள்.19.05.2025. பொருள்:

தொடக்கக் கல்வி வழக்கு- தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க திரு.எஸ்.தாஹா முகம்மது என்பார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு- இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டது. உரிய நடவடிக்கை மேற்கொண்டு. அறிக்கையினை .05.2025-க்குள் சமர்பிக்க கோரல்-சார்ந்து பார்வை:

1. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை வழக்கு W.P(MD),22704 of 2018 நாள்.05.11.2024, 16:12.2024 மற்றும் 21.01.2025.

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கடிதம் ந.க.எண்.5067/ஆ3/2022 நாள்.03.03.2025

3. அரசு கடிதம் எண்.11527/EE1(2)/2024-2 dated:20.03.2025.

மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் கல்வி மாவட்டம், திருவாடனை ஒன்றியம், முகிழ்தகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் (ஆங்கிலம்) பணிபுரியும் திரு.எஸ்.தாஹா முகம்மது என்பவர் M.Com உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் 16.12.2024-ல் கீழ்காணுமாறு தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

4. In view ofthis submission made by the petitioner's Counsel, the learned Additional Government Pleader is directed to get instructions as to i) Whether any BT Assistant/ Secondary Grade Teacher is being provided with incentive increment for their additional qualification of M.Com / M.A (Economics) throughout the state?

And ii) if so, how many persons are receiving the incentives and what is the stand of Government in so far as such persons are concerned? 21.01.2025-ல் கீழ்காணுமாறு இறுதி தீர்ப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

"9.In view of the foregoing reasons and discussions, this writ petition is dismissed. Hope the Government shall find out the ineligible teachers, who are receiving incentive increments for their higher qualification without any relevancy and to take appropriate action to recover the same, as it is a loss to the public exchequer. No costs. Consequently, connected Miscellaneous Petitions are closed. List this writ petition on 21.03.2025, for reporting compliance by the Government. என தெரிவிக்கப்பட்டுள்ளது" மேற்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் Scanned with OKEN Scanner உயர்கல்வி பயின்றமைக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தினை தீர்ப்பாணையில் தெரிவித்துள்ளவாறு மறு ஊதிய நிர்ணயம் செய்ய பணிப் பதிவேடு வாரியாக ஆய்வு செய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை குறிப்பிடுள்ளவாறு பூர்த்தி செய்து ஒன்றிய வாரியான அறிக்கையினை தொகுத்து நீதிமன்றத்தில் சமர்பிக்க ஏதுவாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலக (தொடக்கக் கல்வி) பிரிவு கண்காணிப்பாளர் 26.05.2025 மற்றும் 27.05.2025 அன்று கீழ்காணும் அட்டவணையின்படி இவ்வியக்ககத்திற்கு நேரில் வருகைபுரிந்து தொடக்கக் கல்வி இணை இயக்குநரிடம் (நிர்வாகம்) ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை செய்யாறு பார்வையில் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பாணையின்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடப்பிரிவுகளில் இச் செயல்முறைகள் வெளியிடப்படும் நாளுக்கு பின்னர் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெறுவது கண்டறியப்பட்டால் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

பார்வையில் காணும் தீர்ப்பாணையின் மீது தனி கவனம் செலுத்தி துரித மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் காரணங்களை சுட்டிக்காட்டி காலதாமதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு:-

1. தீர்ப்பாணையின் நகல்.

2. படிவம்-1.

பெறுநர்:-

நகல்:-

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் வழியாக),

தொடக்கக் கல்வி இயக்கக பிரிவு கண்காணிப்பாளர்கள் & அலுவலர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு.

DEE Proceedings - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.