ஆதிதிராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு 2025-2026 - ஆம் ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆணை - வெளியீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - ஆதிதிராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு 2025-2026 - ஆம் ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆணை - வெளியிடப்படுகிறது.
👇👇👇
சுருக்கம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - ஆதிதிராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு – கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-7) துறை
அரசாணை (நிலை) எண். 61
நாள்: 16.05.2025
விசுவாவசு வருடம்,
வைகாசி மாதம் 2- ஆம் நாள், திருவள்ளுவர் ஆண்டு 2056 படிக்கப்பட்டது:
1. அரசாணை (ப) எண். 176, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-7) துறை, நாள் 29.08.2024.
2. அரசாணை (ப) எண். 193, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-7) துறை, நாள் 16.09.2024,
3. ஆணையர், ஆதிதிராவிடர் நலம் ந.க.எண்.எ1/12011/ 2025, நாள் 09.05.2025. அவர்களின் கடித ஆணை:-
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது.
2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதத்தில், 2025-2026-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை, ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு பணியிட மாறுதல் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியிட மாறுதல் ஆகியன இணையவழி (Online) மூலமாகவும், விடுதிகளில் காப்பாளர்களாக மாறுதல் பெறவிழையும் காப்பாளர்களின் பொதுமாறுதல் நிர்வாக காரணம் கருதி, நேரடியாக நடத்திடவும், இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொகுக்கப்பட்டு அரசின் ஆணைக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் நடத்திட தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி பட்டியல்கள் பெறப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி பட்டியல் பெறப்படும் நிறுவனத்தின் மூலம் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடலாம் எனவும் தெரிவித்து, ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு Online மூலம் 12.06.2025 மற்றும் 13.06.2025 தேதிகளில் நடத்திட அனுமதியும், இப்பணிக்காக தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ள சில்லரை செலவினத்திற்கான கணக்குத் தலைப்பின் கீழ் செலவினம் மேற்கொள்ள அனுமதியும் வழங்குமாறு அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
3. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில், 2025-2026-ஆம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு பணியிட மாறுதல் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியிட மாறுதல் ஆகியன இணையவழி (Online) மூலமாகவும், விடுதிகளில் காப்பாளர்களாக மாறுதல் பெறவிழையும் காப்பாளர்களின் பொதுமாறுதல் நிர்வாக காரணம் கருதி நேரடியாக நடத்திடவும் ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
4. மேலும், இக்கலந்தாய்வு பொது மாறுதலின்போது இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.
5. 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட, தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிடர் நல ஆணையரக சில்லரை செலவின கணக்குத் தலைப்பின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிலிருந்து செலவினம் மேற்கொள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.
6. மேலும், மாணக்கரின் கல்வி நலன் பாதிக்காத வண்ணம் பொது கலந்தாய்வு மாறுதல் குறித்த கால அட்டவணையை தயார் செய்து, அதன் அடிப்படையில் கலந்தாய்வு பொது மாறுதலை விரைந்து விரைந்து முடிக்குமாறு ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பதவிகளுக்குமான கலந்தாய்வுகள் சென்னையில் ஆதிதிராவிடர் நல ஆணையர் தலைமையில் உள்ள குழுவால் கண்காணிக்கப்பட வேண்டும்.
7. அனைத்துப் பதவிகளுக்குமான பொது மாறுதல்கள் குறித்த கலந்தாய்வுப் பணிகளை விரைந்து முடித்து இதுகுறித்த அறிக்கையினை அரசுக்கு அனுப்பவும் ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
க.லட்சுமி பிரியா,
அரசு செயலாளர்
பெறுநர்
ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை 600005. இயக்குநர், பழங்குடியினர் நலம், சென்னை 600 005. சம்பளக் கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை 600 008. முதன்மை மாநிலக் கணக்காய்வுத் தலைவர், GL&6оT 60060т 600 018/600 035 (Quшflo) நகல்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளர்,
Q&б0T60060т 600 009.
முதலமைச்சர் அலுவலகம், சென்னை 600 009.
பள்ளிக்கல்வித் துறை, சென்னை 600 009. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலரின் தனிச் செயலர், சென்னை 600 009. இருப்புக் கோப்பு /உதிரி நகல். //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// இணைப்பு
அரசாணை (நிலை) எண்.61/ஆதி(ம)பந(ஆதிந-7)துறை, நாள் 16.05.2025 2025-2026ஆம் கல்வியாண்டு இயபொதுமாறுதல் கலந்தாய்வின் போது பின்பற்றப்பட வேண்டியபொதுவான நடைமுறைகள்
38 மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கும் தனியே User ID (பயனர் குறியீடு) மற்றும் Password (கடவுச்சொல்) தரப்பட வேண்டும். 2. கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர், காப்பாளர்
(பள்ளிக்கு ஆசிரியராக செல்ல விரும்பும் காப்பாளர்) ஒவ்வொருவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட Login-ல் விண்ணப்பங்கள் தனியராலேயே பதிவு செய்யப்பட வேண்டும்.
3. பதியப்பட்ட விண்ணப்பம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு ஒப்பமிடப்பட்ட நகல் தனியரிடம் வழங்கப்பட வேண்டும்.
4. கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்கள் மாவட்ட வாரியாக இணையவழி மென்பொருளில் (Online Software) பதியப்பட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள்.
1) மூன்று வருடங்களுக்கு மேல் அரசுப் பணியாளர்கள் ஒரே பணியிடத்தில் பணியாற்றக் கூடாது என்ற பொதுவான ஆணை, ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் பணியுரியும் பணியிடங்கள் நிர்வாக பணியிடங்கள் அல்ல என்பதால் என்பதால் இந்த இந்த ஆணை கடைபிடிக்கப் படுவதில்லை. இதே முறை தொடரலாம்.
2) பணிஓய்வு, பணித்துறப்பு, பணி நீக்கம், பதவி உயர்வு, மரணம் போன்ற காரணங்களால் 01.06.2025 அன்றைய நிலையில் ஏற்படும் புதிய பணியிடங்கள் மற்றும் நிர்வாகக் காரணங்கள் போன்ற இனங்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு மட்டும் பொது மாறுதல்கள் செய்யப்பட வேண்டும். ஒரு ஆசிரியருக்கு மாறுதல் தருவதற்காக எக்காரணம் கொண்டும் மற்றொரு ஆசிரியரை மாறுதல் செய்யக் கூடாது.
3) இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / தமிழ் ஆசிரியர் / கணினி பயிற்றுநர் / துவக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிட விவரங்கள் ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக தகவல் பலகையில் கலந்தாய்வு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஒட்டப்பட்டு அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்திலும் வெளியிட வேண்டும். கலந்தாய்வு குறித்த செய்தியினை அனைத்து செய்தித் தாள்களிலும் வெளியிட வேண்டும். 4) காலிப் பணியிடங்களுக்கு மாறுதல் கோரிய ஆசிரியர்கள் தங்களுடைய விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது. மேற்கண்ட விவரங்கள் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் உள்ள அலுவலக தகவல் பலகையில் ஒட்டி அறிவிப்பு செய்யப்பட வேண்டும். 5) மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முன்னுரிமையின்படி பரிசீலனை செய்யப்பட வேண்டும்:-
6) i. ii. a) மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் கோரிக்கைகள்.
b) பிற மாவட்டங்களில் இருந்து மாவட்ட மாறுதல் வழங்கி ஒதுக்கீடு செய்யப்படுவோரின் கோரிக்கைகள்.
பணிநிரவலில் ஏற்கனவே வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் முதன் முன்னுரிமையில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
பணியிடமாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள் பணிபுரியும் இடத்தில் 31.05.2025 அன்றைய நிலையில் ஓராண்டு கட்டாயம் பணி முடித்திருக்க வேண்டும். 2025-2026-ஆண்டில் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள கீழ்காணும் பிரிவினர்களுக்கு ஓராண்டு பணிக்காலத்திலிருந்து விலக்களிக்கலாம்:-
(அ). இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவி தங்களின் சொந்த பாதுகாப்பு கருதி மாறுதல் கோரும்போது.
ஆ). முற்றிலும் கண் பார்வையற்றவர்கள் (Total Blindness) (இ). மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள்.
(FFFF). இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.
(உ). கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள்.
(ஊ), பணி நிரவல் மூலமாக பிற பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டவர்கள். (OT). விதவைகள். Scanned with OKEN Scanner -6- 7) ஒரு காலிப் பணியிடத்திற்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரினால் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி முன்னுரிமை அளிக்கப்பட CQJOOOT HID:-
(i) 100% Visually impaired teachers
(ii) Physically challenged teachers (including visually impaired) with a disability of 40% or more (bench mark disability) and who possess relevant certificate issued by the competent authority, upholding the claim.
(iii) Teachers having mentally ill or physically challenged children and who possess relevant certificate issued by the competent authority upholding the claim.
(iv) Teachers who have undergone kidney transplantation, dialysis treatment, heart operation and those affected by cancer and brain tumour.
(v) Teachers who have gone to the priority blocks and continue to serve 3 and 5 years as the case shall be given priority after completing the said period.
(vi) Spouse of serving personnel of defence services.
(vii) Widow / widower and single women over the age of 40 and legally divorced women. Teachers who have served for more than 5 years in the present station.
(viii) Spouse employed at more than 30 km radius from the place of work:-
If both husband and wife are employed and the distance between the places of their employment is more than or outside a 30 km radius, their case will be considered under spouse quota and they will be treated as living in two different places (The spouse transfer category is applicable only in respect of spouse employed in schools/offices under Union / State Government/ Public Sector Undertakings and Government Aided Schools). A service certificate is to be produced from the competent authority to avail this benefit).
கணவன் அல்லது மனைவி திடீரென்று விபத்திலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ இறந்தாலோ அத்தகைய ஆசிரியர்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்தாய்வு குறித்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சிறப்பு நிகழ்வாகக் கருதி மாறுதல் வழங்கலாம்.
9) கலந்தாய்வு (Counselling)
கலந்தாய்வு இணையவழி (Online) முறையில் நடைபெறும். கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைத்து நிலை ஆசிரியர்கள் / காப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலை தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கு ஆதிதிராவிடர் நல ஆணையரால் பணியிட மாறுதல் ஆணை வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் மாறுதல் கோரும் பள்ளிகளில், மாவட்டத்தில் காலியிடம் இருப்பின் மாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே மாற்றப்பட்டவர்கள் புகார் மீது, நிர்வாகக் காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து விண்ணப்பிக்கலாம். ஆயினும், ஏற்கனவே ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்கக்கூடாது
கோரிக்கையின் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டிற்கு மாறுதல் கோர இயலாது. பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்கள் சென்றவர்கள் சொந்த மாவட்டத்தில் பணிக்குறைப்பு காரணமாக வேறு மாவட்டத்திற்கு சென்றவர்கள் ஆகியவர்களுக்கு இந்த குறைந்தபட்ச அளவு பொருந்தாது. ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் மீது புகார்கள் ஏதும் வரப்பெற்றால், புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அவர்களை விடுதி பொறுப்பு இல்லாத வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்யலாம்.
ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு காப்பாளினிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் காப்பாளர்களை நியமிக்கக் கூடாது. காப்பாளர்களுக்கு மாணவியர் விடுதிகளில் கூடுதல் பொறுப்பும் வழங்கக் கூடாது.
சில மாவட்டங்களில் விடுதிகளின் எண்ணிக்கை குறைவாகவும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. சில மாவட்டங்களில் விடுதிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. எனவே, 3 ஆண்டுகள் தொடர்ந்து விடுதிகளில் பணிபுரிந்த காப்பாளர் / காப்பாளினிகளை பள்ளிகளில் ஆசிரியராக பணியிட மாறுதல் செய்யப்படுகின்ற நேர்வில் நிர்வாக ரீதியாக ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களால் பரிசீலிக்கப்பட்டு பணியிட மாறுதல் வழங்கலாம். காப்பாளர்கள் / காப்பாளினியாக மூன்றாண்டுகள் பணி காலத்தை அவர்கள் காப்பாளர் / காப்பாளினியாக பணியில் சேர்ந்த நாளினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மூன்று கல்வியாண்டுகள் முடிந்ததை அடிப்படையாக கொள்ள வேண்டும்.
பொறுப்பு காப்பாளர் / காப்பாளினி நியமனங்கள் மற்றும் மாற்றுப்பணி நியமனங்கள் நேர்வில் தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் உரிய முன்மொழிவுகளை ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுப்பி ஆணையர் அவர்களால் ஆணை வழங்கப்பட வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆணை வழங்குதல் கூடாது. மாறுதல் கோரியுள்ள ஆசிரியர்களின் பெயர்களை, மேற்கண்ட விவரங்களின்படி முன்னுரிமை பட்டியல் தயாரித்து, அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வுக்கு (Counselling) வரவழைத்து அவர்களிடம் தகுதியுள்ள காலிப் பணியிடங்களின் பட்டியலைக் கொடுத்து அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு வழங்கும் போது மாறுதலால் ஏற்படும் காலிப் பணியிடத்தையும் அவ்வப்போது பட்டியலில் சேர்த்து அடுத்து முன்னுரிமைப்படி வரும் ஆசிரியர்களின் விருப்பத்தினைப் பெற்று மாறுதல்கள் வழங்கப்பட வேண்டும். மேற்படி முறையால் விண்ணப்பத்தில் குறிப்பிடாத பள்ளிகளில் காலிப் பணியிடம் இருந்து அதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தால் வழங்கலாம். மாறுதல் ஆணைகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் அறிவிப்புப் பலகையில் தெளிவாக வெளியிடப்பட வேண்டும். கலந்தாய்வு நாளன்றே மாறுதல் உத்தரவு அளிக்கப்பட வேண்டும். கலந்தாய்வின்போது இடையூறு விளைவிக்கும் அல்லது கலந்தாய்வை தடுக்கும் ஆசிரியர்கள் / இதர பணியாளரின் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்துறையில் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் நிரந்தரமாக காலியாகும் பணியிடங்களில் மாறுதல் மூலம் ஒரு முறை பட்டதாரி ஆசிரியரைக் கொண்டு நிரப்பப்பட்டவுடன் அப்பணியிடம் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடமாகவே கருதப்படும்.
ஆதிதிராவிடர் நலத்துறையை பொறுத்தமட்டில் ஆசிரியர் பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு (Counselling) முறையில் அவ்வாசிரியப் பெருமக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி மாறுதல் செய்யப்படுவதால் "மாறுதல் பயணப்படி" போன்ற எந்தவித செலவினமும் அரசுக்கு ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது, மேலும், அனைத்து பதவிகளுக்குமான கலந்தாய்வுகள் சென்னையில் ஆதிதிராவிடர் நல ஆணையர் தலைமையில் உள்ள குழுவால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
இல்லாமல் சிறப்பு நிகழ்வுகள் எனக் கருதப்படும் இனங்களில், குறிப்பாக, ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதை அவசியம் என நடைமுறைப்படுத்தவும், நிர்வாக ஒழுங்கிற்கு அவசியம் கருதப்படும் நிலையில் நிர்வாக காரணங்களுக்காகவும் ஆதிதிராவிடர் நல ஆணையரால் மாறுதல் ஆணைகள் வழங்க அனுமதி வேண்டப்படுகிறது.
பொது மாறுதல்களுக்குப் பின் நிர்வாகக் காரணங்களுக்காக மாறுதல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அனைத்து ஆதாரங்களுடன் உரிய முன்மொழிவை ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுப்ப வேண்டும். ஆணையராலேயே முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அவசியம் என அறியப்பட்டால் ஆணையரால் மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் எவ்வித மாறுதல் ஆணையும் வழங்கக்கூடாது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மனமொத்த மாறுதல்களைப் பொருத்தமட்டில், பொது மாறுதல் கலந்தாய்விற்குப்பின் ஆணையரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மனமொத்த மாறுதலில் ஏற்கனவே பயனடைந்தவர் திரும்பவும் அதே இடத்திற்கு மீண்டும் மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்க கூடாது.
மனமொத்த மாறுதல்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிக்காலத்தை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். க.லட்சுமி பிரியா, அரசு செயலாளர்
CLICK HERE TO DOWNLOAD Transfer norms Go - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.