02.06.2025 அன்று பள்ளிகள் திறப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை...!
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 30.04.2025 எனவும் 01.05.2025 முதல் கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து , 2025-26ஆம் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் 02.06.2025 ( திங்கள் கிழமை ) என அறிவிக்கப்படுகிறது .
அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.