LKG & UKG தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கைகள் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - DEE Proceedings
அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் LKG & UKG தற்காலிக தொகுப்பு ஊதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் - தற்காலிக தொகுப்பூதிய மழலையர் பள்ளி ஆசிரியர்கள் (தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரியர்கள் சங்கம்) அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் LKG & UKG தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக.
பார்வை
1. தற்காலிக தொகுப்பூதிய மழலையர் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள்.
2. அரசாணை (நிலை) எண்.164 பள்ளிக் கல்வி (தொ.க.2(2)) துறை நாள்.29.09.2022.
3. அரசுக் கடிதம் எண் (efile) 2803/தொ.க.2(2)/2025, நாள் 09.04.2025.
பார்வை 2-ல் காணும் அரசாணையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து LKG மற்றும் UKG வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கீழ்க்கண்ட கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
1. அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
2. அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு மின்னணு நிதி (ECS) பரிமாற்ற முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தற்காலிக ஆசிரியர்களுக்கு பிரதி மாதம் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல் தேதியிலேயே ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்யப்பட வேண்டும்.
3. மேற்குறிப்பிட்டவாறு மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் பணிபுரியும் பள்ளியின் மூலம் கல்வியியல் மேலாண்ை தகவல் முறைலை (EMIS) தளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு பதிவெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை EMIS எண் பெறாதவர்கள் உடனடியாக பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளி பயன்பாட்டிலுள்ள Login-ல் ஆசிரியரின் விவரத்தினை பதிவேற்றம் செய்து EMIS எண் பெற சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கண்ட மையங்களில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் EMIS எண் பெற்ற விவரத்தினை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) உறுதி செய்யப்பட வேண்டும்.
இச்சுற்றறிக்கையினை அனைத்து அங்கன்வாடி மையங்களில் செயல்படும் பள்ளிக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும். மேலும், இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை இவ்வியக்கம் அனுப்பி வைக்குமாறு அனைத்து மால்ட் மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.