அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரி ஒலிபெருக்கியுடன் தலைமை ஆசிரியர் நூதன பிரசாரம்
ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், ஜிலு குமிலி அடுத்த முலகம் பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ரமேஷ்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என தனது பைக்கில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த போட்டோக்களை துண்டு பிரசுரமாக அச்சடித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கி வருகிறார்.
தனியார் மற்றும் கார்ப்ரேட் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் பாடம் கற்பிப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இவரது நூதன பிரசாரம் குழந்தைகளின் பெற்றோர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.