சுற்றுச்சூழல் பாதுகாத்தல் காடுகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
வழக்கு- 0.A எண் 119 / 114 - திருஸ்ரீகாந்த் கடே -புதுதில்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது - சுற்றுச்சூழல் பாதுகாத்தல் காடுகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுத்துதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 👇👇👇
பார்வை 1 ல் காண் புது தில்லி பசுமைத் தீர்ப்பாயத்தில், திரு. ஸ்ரீகாந்த்கடே என்பார் சுற்றுச்சுழல் பாதுகாத்திடும் பொருட்டும், காடுகள் அழியாமல் இருந்திடும் பொருட்டும்,
காகிதங்கள் மரத்தினால் செய்யப்படுகிறது என்று தெரிவித்து, ஏற்கனவே உருவாக்கப்பட்ட காகிதங்களை மீண்டும் பயன்படுத்தினால் பெருமளவு சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் மரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்து பள்ளிதோறும் புத்தக வங்கி துவங்கிட புதுதில்லி பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் (NATIONAL GREEN TRIBUNAL, PRINCIPAL BENCH, NEW DELHI) வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பார்வை 2ல் காண் இவ்வியக்கக செயல்முறைகளின் வாயிலாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் புத்தக வங்கி (Book Bank) துவங்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நூலகங்கள் பராமரிப்பது போன்று புத்தக வங்கி துவங்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தக வங்கி சார்ந்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள்:- 1. ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்களுக்கு தனி அறை பயன்படுத்துவது போன்று புத்தக வங்கிகளுக்கும் தனி அறை ஒதுக்கீடு செய்து பாதுகாத்து பராமரிக்கப்பட வேண்டும்.
2. ஒவ்வொரு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் புத்தக வங்கிகளை கண்காணிக்க ஒரு ஆசிரியரை நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும்.
3. தேர்வுகள் முடிந்ததும் அனைத்து புத்தகங்கள் பெறப்பட வேண்டும்
மாணவ/மாணவியர்களிடமிருந்தும் 4. அனைத்து மாணவ/ மாணவியர்களிடமிருந்தும் பெறப்பட்ட புத்தகங்களை வகுப்பு வாரியாக பிரித்து புத்தக வங்கிகளில் பராமரிக்கப்பட வேண்டும்.
5. புத்தக வங்கிகளில் பராமரிக்கப்படும் புத்தகங்களுக்கு புத்தக வங்கி பதிவேடு’ பராமரிக்கபட்டு அதில் வகுப்பு வாரியாக மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை,பயன்படுத்துவற்கு உகந்தமான புத்தகம்,பெறப்பட்ட புத்தகம் மற்றும் விநியோகம் செய்யப்படும் புத்தக எண்ணிக்கையின் விவரங்களை பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
6.மாணவ/மாணவியருக்கு பயன்படுத்திய/புதிய புத்தகங்கள் வழங்கும் போது குலுக்கல் முறை மூலமாக புத்தகங்களை வழங்கலாம்.
7. புத்தக வங்கிகளில் பராமரிக்கப்படும் புத்தகங்களில் பயன்படுத்துவற்கு உகந்ததான புத்தகங்களை மட்டும் தொடர் கல்வியாண்டில் மாணவ/ மாணவியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்
புத்தக வங்கி சார்ந்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள்:-
1. அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் புத்தக வங்கி துவங்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேற்கண்டவாறு அறிவுரைகள் வழங்கி அவை பின்பற்றப்படுகிறதா என்பதனை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் காண்காணிக்கப்பட வேண்டும்.
2. அனைத்து பள்ளிகளிலும் புத்தக வங்கி துவங்கப்பட்டதற்கான சான்றினை தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று கல்வி மாவட்ட வாரியாக தொகுத்துமுதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆண்டாய்வின் போது அதனை முன்னிலைப்படுத்த வேண்டும் பராமரிக்கப்பட வேண்டும்.முதன்மைக் கல்வி அலுவலக 3. பள்ளிகளில் புத்தக வங்கி செயல்படுவதினை மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிவிலும் புத்தக வங்கியில் பெறப்பட்ட மற்றும் பராமரிக்கப்பட்ட புத்தகங்களின் (வகுப்பு மற்றும் பாட வாரியாக) எண்ணிக்கையினை மாவட்ட வாரியாக தொகுத்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு தவறாது அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
5. புத்தக தேவைப்பட்டியல் கேட்கும் நிலையில் புத்தக வங்கியில் உள்ள கேட்க உகந்த புத்தகங்களை கழித்து புத்தக தேவைப்பட்டியல் பயன்படுத்துவதற்கு வேண்டும்.
மேற்கண்ட விவரங்கள் சார்ந்து 2018- 2019 ஆம் கல்வியாண்டின் முடிவில் அனைத்து மாணவ/மாணவியர்களிடமிருந்தும் அனைத்து புத்தகங்களையும் பெற்று புத்தக வங்கியில், மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
அனைத்து புத்தகங்களும் மறு பயன்பாடு செய்யப்படுவதினால் புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் புத்தகங்களையும் பெற்று, புதிய பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் மாணவ/மாணவியர்களுக்கு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது மேலும் இனி வரும் காலங்களில் மேற்கண்ட அறிவுரைகள் தவறாது பின்பற்றி ஒரு பள்ளிகள் கூட விடுபடாமல் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் புத்தக வங்கி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD DSE - E Section Book Bank - Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.