உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 3, 2025

உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்!



Plus 2 student who wrote his exam after falling at the feet of his deceased mother and receiving blessings! - உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவன்!

திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்று விட்டு, பிறகு இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த சோகத்தையும் மறைத்துக் கொண்டு பிளஸ் 2 மாணவன் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். வள்ளியூரைச் சேர்ந்த மாணவன் சுனில் குமார் என்பவரின் தாயார் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவர் காலமானார்.

தேர்வுக்கு தயாராகி இருந்த சுனில் குமார், உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டு, கண்ணீருடன் சென்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வை முடித்து விட்டு வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்று தாயுக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.