ஆசிரியர் மீது தாக்குதல் - காவல் நிலையத்தை ஆசிரியர்கள் முற்றுகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 16, 2025

ஆசிரியர் மீது தாக்குதல் - காவல் நிலையத்தை ஆசிரியர்கள் முற்றுகை



Attack on teacher - Teachers blockade police station ஆசிரியர் மீது தாக்குதல் - காவல் நிலையத்தை ஆசிரியர்கள் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து கொண்டிருந்தார். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவர்களை சில வாலிபர்கள் தாக்குவதாக கிடைத்த தகவலின் பேரில் மாணிக்கம் அங்கு சென்றார். அப்போது, மாணவர்களை சிலர் அடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த இளைஞர்கள் ஆசிரியர் மாணிக்கத்தையும் தாக்கினர்.

இதில் காயமடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், சுமார் 20க்கும் மேற்பட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியரை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனால் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.