Direct Recruitment of Associate Professor, Assistant Professor and Assistant Professor (Pre – Law) in Government Law Colleges– 2025
Applications are invited for appointment by Direct Recruitment to the posts of Associate Professor, Assistant Professor and Assistant Professor (Pre – Law) in Government Law Colleges - 2025 in the Tamil Nadu Legal Educational Service from the eligible Candidates through Online mode only up to 5.00 p.m. on 03.03.2025 as detailed below:
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Professor காலியிடங்கள்: 64
சம்பளம்: மாதம் ரூ. 68,900 - 2,05,500
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Professor(Pre-Law)
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ. 57,700 - 1,82,400
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் அல்லது கலை அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றும் நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை!
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்மொழி திறனறியும் தேர்வு, முக்கிய பாடப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு தோராயமாக 11.5.2025 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக்க கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.300. இதர பிரிவினர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.3.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.