26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் & கூட்டப் பொருள்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 7, 2025

26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் & கூட்டப் பொருள்கள்



Conducting Gram Sabha Meeting on Republic Day 26.01.2025 & Meeting Materials 26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் & கூட்டப் பொருள்கள்

1-ல் கண்டுள்ள அரசாணைப்படி, குடியரசு தினத்தன்று (26.01.2025) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று 26.01.2025 காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பார்வை 1-ல் கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் 26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

இடத்தை மேலும், 26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி "Namma Grama Sabhai Mobile App" மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை 26.01.2025 அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு: கிராம சபைக் கூட்டப் பொருள்கள். ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பெற வேண்டிய கிராமச் சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம் பொருள் 1: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.

கிராம ஊராட்சிகளில், 01.04.2024 முதல் 31.12.2024 முடியவுள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை (படிவம் 30) 2024-25 இல் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல்.

2024-25 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம்:

வ.எண்.

திட்டத்தின் பெயர்

பணியின் பெயர்

மதிப்பீடு ரூ.

தற்போதைய நிலை

பொருள் 2: கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை :

கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல். பொருள்3: கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உறுதி செய்தல். அனைத்து குக்கிராமங்களிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளுதல் அனைத்து அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மேல் நிலை நீர் தேக்க தொட்டி, தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல் (பிரதிமாதம் 5ம் தேதி மற்றும் 20ம் தேதி) தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் பின்வரும் பொருட்களில் உற்பத்தியாவதை தடுத்தல்.

1) தெளிந்த நீர்த்தொட்டி

2) பயன்பாடற்ற பானைகள்

3) குளிர்சாதன பெட்டி பின்புறம்

4) பழைய டயர்

5) தேங்காய் மட்டைகள்

6) செடிகள் வளரும் தொட்டி

7) புதிய கட்டுமான பணிகள் நடக்குமிடங்கள் மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமல், அவற்றை முறையாக அகற்றி, கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

பொருள் 4: மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's Plan Campaign) மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல்:

15-வது மத்திய நிதி மான்யக்குழுவினால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமான வசதிகள் மற்றும் இதர வசதிகள் ஆகியவைற்றைக் கருத்திற்கொண்டு 2025-26 ஆம் நிதியாண்டிற்கு தேவையான பணிகள், வசதிகள் ஆகியவற்றைத் தொகுத்து கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் வேண்டும்.

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்களின் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக மாற்றிட உத்தேசித்து மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கான திட்டமிடல் இயக்கத்தினை அறிவித்துள்ளது. வளர்ச்சி 2025-26 ஆம் ஆண்டுக்காண கிராம ஊராட்சி திட்டத்தினை பின்வரும் திட்டங்களை ஒருங்கிணைந்து முழுமையான செயல் திட்டமாக தயாரிக்கப்பட வேண்டும்.

கிராம வறுமை குறைப்பு திட்டம் (Vilage Poverty Reduction Plan) கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் (Village Sanitation Saturation Plan)

கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம் (Vilage Water Supply Saturation Plan)

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் (AGAMT Convergence Plan)

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP)

மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் போது இரண்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பெறுதல் வேண்டும். முதல் கிராம சபைக் கூட்டத்தில், திட்டமிடலுக்கான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும். 2-வது கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

பிறதுறைகளின் முன்களப் பணியாளர்கள், கிராம வளர்ச்சி திட்டம் தயாரிப்பதில் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதால், மேற்கூறப்பட்ட இரண்டு கிராம சபை கூட்டங்களிலும் கலந்து கொள்வது மிக மிக அவசியமானது. மேற்படி முன்களப்பணியாளர்கள் தாங்கள் தொடர்புடைய துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளங்கள், ஒருங்கிணைப்பு வழிமுறைகள் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம் தொடர்புடையத் துறையின் கிராம செயல்திட்டத்தினை கிராம வளர்ச்சித் திட்டமாக மாற்ற இயலும்.

கிராமத்தின் அனைத்து மக்களும் பங்கேற்புடன் கூடிய விரிவான, ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டத்தினை தயாரிக்கும் பொருட்டு அக்கிராமத்தின் இலக்குகளை முழுமையாக அடைவதை குறிக்கோளாகக் கொண்டு பிற துறைகளின் திட்டங்களை உள்ளடக்கி கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்டவாறு தயாரிக்கப்பட்ட 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல். பொருள் 5: இதர பொருட்கள் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிறபொருட்கள் ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராம சபைக் கூட்டம் - 26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் . கூட்டப் பொருள்கள்

Grama Sabha Agenda - Republic Day - 26.01.2024

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.