MBBS மாணவர் விபரம் பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு MBBS student details upload deadline extended
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள் குறித்த விபரங்களை, இணைய வழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை, தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ ஆணையம் அறிக்கை:
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். இந்தாண்டில் கல்லுாரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள், மதிப்பெண் விபரம், இட ஒதுக்கீடு விபரம், கட்டண விபரம் உள்ளிட்டவற்றை, ஆணைய பக்கத்தில் பதிவேற்ற, கடந்த 8ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாக, டிசம்பர், 10 வரை நீட்டிக்கப்படுகிறது.
அதேபோல, எம்.டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்க, டிச., 10 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.