போராட்டத்தில் குதித்தது... தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
CLICK HERE TO DOWNLOAD PDF
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
(பதிவு எண்.133/2021)
மாநில மையம்
எண்.3(G2), கிருஷ்ணப்பர் தெரு,
சேப்பாக்கம், சென்னை-5
-------------------------------------------------------------
பெறுநர் நாள்: 10.11.2024
ஆசிரியர் அவர்கள்
…………………. பத்திரிக்கை/நாளிதழ்
ஐயா,
எங்களது அமைப்பின் சார்பாக கீழ்க்காணும் பத்திரிக்கை செய்தியினை தங்களது நாளிதழில் பிரசுரம் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயாலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிடும் பத்திரிக்கை செய்தி. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் எம். தனலட்சுமி வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் வேலையறிக்கை வாசித்தார், மாநில பொருளாளர் இரா.பாலசுப்பிரமணியன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். முடிவில் மாநில துணைத் தலைவர் பி.செந்தில் குமார் நன்றி கூறினார். மாநில செயற்குழுவில் கீழ்க்கண்ட இயக்க நடவடிக்கையை மேற்கொள்வது என அறைகூவல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விரோத அறிவிப்பை கண்டித்து அனைத்து அரசு அலுவலகங்களிலிருந்து ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என வாக்குறுதிகளை வழங்கிய இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
• 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் அரசுத்துறைகளில் ஏற்பட்டுள்ள சுமார் 4 இலட்சத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவோம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
• அவுட்சோர்சிங், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியமுறையை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்குவோம்.
• அனைத்து து றைவாரியான கோரிக்கைகளையும் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி கனிவுடன் பரிசீலிப்போம்.
என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் கடந்த ஊழியர் விரோத ஆட்சியை அகற்றி அரசு ஊழியர்கள் , ஆசியர்களுக்கு விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விடியல் ஆட்சி அமைய அரும்பாடுபட்டோம். ஆனால், வெற்றி பெற்று மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இவர்கள் ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படியை முடக்கினார்கள். அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கினார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆண்டாண்டு காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை முடக்கினார்கள். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25%-லிருந்து 5%-மாக குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினார்கள். பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பாமல் அப்பணியிடங்களை ஒப்படைத்ததற்கான எவ்விதமான அரசாணைகளும் வெளியிடாமல் மௌனமாக பணியிடங்களை மொத்தப் பணியிட எண்ணிக்கையிலிருந்து முடக்கி எதிர்கால இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினார்கள்.
இந்நிலையில் கடந்த 08.11.2024 - ந் தேதி தலைமைச் செயலகத்திநடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வருகிறது. புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம். போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எப்படி தற்போது ஓய்வூதியப் பலன்கள் ஏதும் கிடைக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டார்களோ, அதே நிலைமை தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வரப்போகிறது என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கருதுகிறது.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போராட்ட களத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும், தி.மு.க ஆட்சிக் கட்டில் அமர்வதற்காக பல இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் மற்றும் அவர்களது குடும்ப வாக்குகளையும் சேர்த்து ஒரு கோடிக்கும் மேலான வாக்குகளை பெறுவதற்காக 2021 தேர்தல் கால வாக்குறுதியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என அறிவித்ததற்கு மாறாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தற்போதைய அறிவிப்பை அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களின் ஊழியர் விரோத நடவடிக்கையாகவும்,பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றும் செயலாகவே பார்க்கிறோம்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பை கண்டித்து இன்று (10.11.2024) கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கீழ்க்காணும் இயக்கங்களைத் தீர்மானித்துள்ளோம்.
• 12.11.2024 நம் தேதி செவ்வாய்க்கிழமை அனைத்துதுறை அரசுத்துறை அலுவலகங்களிலிருந்தும் ஊழியர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. • மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்காவிட்டால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் மாதம் முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
• 25.01.2025-ல் மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
• தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள், அனைத்துத் துறைகளிலும் புறஆதார முறையில் பணிபுரியும் கணினி இயக்குபவர்கள், கொசுப் புழு ஒழிப்பு ஊழியர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு ”வாழ்வாதார ஊதியம் கோரும்” மாநாட்டை 08.02.2025(சனிக்கிழமை) திருச்சியில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
• 20.02.2025 ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை மிக சக்தியாக நடத்துவது உள்ளிட்ட அடுத்தடுத்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. நன்மதிப்புக்களுடன்
சு. தமிழ்ச்செல்வி மாநில தலைவர்
சு. ஜெயராஜராஜேஸ்வரன் பொதுச்செயலாளர்
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.