l478 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 22, 2024

l478 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!



l478 தற்காலிகப் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

l478 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் முதன்மைக் அலுவலகங்களில் தோற்றுவிக்கப்பட்ட தற்காலிக பணியிடங்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடத்திற்கு 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - தொடர்பாக. 1. அரசாணை (1டி) 6T600T.253, பள்ளிக் (ப.க.4(2))த் துறை, நாள் 12.04.2018.

கல்வி அரசாணை (1டி) எண்.53, பள்ளிக் கல்வி (ப.க.4(2))த் துறை, நாள் 19.03.2021.

3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித எண்.001511/எல்/இ3/2021, நாள் 09.10.2024.

ந.க.

அரசாணை (1டி) எண்.253, பள்ளிக் கல்வி (ப.க.4(2)த் துறை, நாள் 12.04.2018-ல், பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு தற்காலிகமாக ஒப்பளிக்கபட்ட 478 ஆசிரியரல்லாதோர் மற்றும் அலுவலர்கள் பணியிடங்கள் 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. அரசாணை (1டி) எண்.53, பள்ளிக் கல்வி (ப.க.4(2))த் துறை, நாள் 19.03.2021-ல், பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு தற்காலிகமாக ஒப்பளிக்கப்ட்ட 478 ஆசிரியரல்லாதோர் மற்றும் அலுவலர்கள் பணியிடங்கள் 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.001511/எல்/ இ/2021, நாள் 13.03.2024-ல், மேற்காணும் பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.03.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதியக் கொடுப்பாணை (Express Pay Order) வழங்கப்பட்டுள்ளது.

4. அரசு கடித எண்.3427/ப.க.4(2)/2024, நாள் 29.04.2024-ல், 01.04.2024 முதல் 30.09.2024 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

5. பள்ளிக் கல்வி இயக்குநர் தற்போது, மேற்கண்ட 478 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.04.2024 முதல் 30.09.2024 வரை ஆறு மாதங்களுக்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாணை பெற காலதாமதம் ஆகும் என்பதால் 01.10.2024 முதல் 31.03.2025 ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

6. மேற்காணும் சூழ்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று, மேற்குறிப்பிட்ட 478 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.10.2024 முதல் மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது.

மேற்படி அலுவலர்களுக்கான 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD 478 Post Pay Authorization For The Month Oct-24 To Dec-24 Order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.