கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 3, 2024

கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை



கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் கீழ் இயங்கும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 108 குரூப் C பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

என்ன பணியிடம், அதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை போன்ற அனைத்துத் தகவல்களையும் இந்த செய்தித் தொகியூப்பில் தெரிந்து கொள்ளலாம் . அலுவலக உதவியாளர் (Group C)

சம்பளம்: மாதம் Rs.35,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 108

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள்,

PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,

PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,

PwBD (OBC) - 13 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர் .

: மலேசியாவில் வேலை.. ₹80 ஆயிரம் வரை சம்பளம்.. 10வது பாஸ் ஆகியிருந்தாலே விண்ணப்பிக்கலாம்.. தமிழ்நாடு அரசு ஏற்பாடு.. விவரம் இதோ எப்படி விண்ணப்பிப்பது ?

தகுதிதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

குறிப்பு :

இந்த பணியிடத்துலகு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதிரிலும் பணியமர்த்தப்படலாம் . அதை மனதில் கொண்டு அதற்கு இணங்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.