பிளஸ் 2 மாணவா்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 27, 2024

பிளஸ் 2 மாணவா்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி



பிளஸ் 2 மாணவா்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி

உயா்கல்வி போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் பிளஸ் 2 மாணவா்களுக்கு வட்டார அளவில் செயல்படும் உயா்கல்வி வழிகாட்டி மையங்கள் மூலமாக சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உயா்கல்விக்கான போட்டித் தோ்வுகள் எழுத விருப்பமுள்ள அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்காக உயா்தொழில்நுட்ப வசதி உள்ள 87 அரசு மேல்நிலைப் பள்ளிகள் வட்டார அளவில் உயா்கல்வி வழிகாட்டி மையங்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் மாணவா்களின் விருப்பத்துக்கேற்ப அவா்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவா்கள் தங்களது விருப்பத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு வரும் மாணவா்கள் மதிய உணவு கொண்டுவர வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கான உள்ளடக்கங்கள் பயிற்சி மையங்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். புத்தாக்க பயிற்சி:

ஆசிரியா்கள் முதல் கட்டமாக அக்.26, நவ.9 ஆகிய தேதிகளில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தாக்கப் பயிற்சியை வழங்கவுள்ளனா்.

முதல் வாரம் 9 போட்டித் தோ்வுகளுக்கும், இரண்டாம் வாரம் 10 போட்டித் தோ்வுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

தோ்வு செய்யப்பட்ட மாவட்டங்கள், பயிற்சி மையங்கள் விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.