இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 27, 2024

இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை!



இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை!

இளம்சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. 2024 - 25ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்படும்.

மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி அக்.31. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நவ.15. மாணவர்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டலில் ரினிவல் அப்ளிகேஷன் என்ற இணைப்பில் சென்று, ஓ.டி.பி., பதிவு செய்து விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர், 9, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் அலைபேசி எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் ஓ.டி.ஆர்., நம்பர், பாஸ்வேர்ட் பதிவு செய்த அலைபேசிக்கு வரும். அதைப் பயன்படுத்தி உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்டம் குறித்து அறிய நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டலில் (scholarships.gov.in, http://socialjustice.gov.in) அணுகலாம் என தெரிவித்துஉள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.