10th, 11th, 12th - Public Exam Time Table 2025 - நாளை மறுநாள் வெளியிடு!
நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை வழக்கமாக நடைபெறும்.
10 , 11 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 14 ம் தேதி வெளியாகிறது
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள்(அக். 14) அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
இந்நிலையில் நடப்பு(2024-25) கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அக். 14 ஆம் தேதி வெளியிட உள்ளார். இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில்,
'தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின்பேரிலும், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகிற திங்கள்கிழமை (14.10.2024) காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.