TETOJAC - அடுத்த 5 நகர்வுகள் - ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 16, 2024

TETOJAC - அடுத்த 5 நகர்வுகள் - ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு

TETOJAC - அடுத்த 5 நகர்வுகள் - ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு



டிட்டோஜேக்‌ பேரமைப்பின்‌ மாநில்‌ உயர்‌ மட்டக்குழு உறுப்பினர்களை உடனடியாக அழித்துப் பேசி 31 அம்சக் கோரிக்கைகளுக்குத்‌ தீர்வுகாண வேண்டும். 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சித்‌ தலைவர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதாகவும், கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் டிட்டோஜேக் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''டிட்டோஜேக்‌ பேரமைப்பின்‌ மாநிலப்‌ பொதுக்குழு அண்மையில் நடைபெற்றது. டிட்டோஜேக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும்‌, தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியின்‌ பொதுச் செயலாளர்‌ தலைமையேற்றார்‌.

டிட்டோஜேக்‌ இணைப்பு சங்கங்களின்‌ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்களும்‌, பொதுக்குழு உறுப்பினர்களும்‌ பங்கேற்று 31 அம்சக் கோரிக்கைகளை வென்றெடுப்பது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள்‌ பற்றி கருத்துக்களைத்‌ தெரிவித்தனர்‌, அனைவரின்‌ கருத்துக்கள்‌ அடிப்படையில்‌ பின்வரும்‌ தீர்மானங்கள்‌ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம்‌ 1: அனைத்துக்‌ கட்சித் தலைவர்கள்‌ சந்திப்பு

19.09.2024, 20.09.2024 ஆகிய இரண்டு நாள்கள்‌ சென்னையில்‌ அனைத்துக் கட்சித்‌ தலைவர்களைச்‌ சந்தித்து டிட்டோஜேக்கின்‌ 31 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அழுத்தம்‌ தர வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்‌ 2: அமைச்சர்‌கள்‌, மக்கள்‌ பிரதிநிதிகளை மாவட்டங்களில்‌ சந்தித்து தரவு திரட்டுதல்,

21.09.2024, 22.09.2024 ஆகிய இண்டு நாள்கள்‌ மாவட்ட டிட்டோஜேக்‌ஒருங்கிணைப்பாளர்கள்‌ அனைத்து இயக்கங்களின்‌ மாவட்ட, வட்டாரப்‌பொறுப்பாளர்கள்‌ இணைந்து அந்தந்த மாவட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, பொறுப்பு அமைச்சர்கள்‌, மக்கள்‌ பிரதிநிதிகளைச்‌ சந்தித்து டிட்டோஜேக்கின்‌ 31 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்து ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம்‌ 3: கோட்டை முற்றுகைப்‌ போராட்ட ஆயத்தக்‌ கூட்டங்கள்‌

23.09.2024, 24.09.2024 ஆகிய தேதிகளில்‌ மாவட்ட அளவில்‌ கோட்டை முற்றுகைப்‌ போராட்ட ஆயத்தக்‌ கூட்டங்களை மாலை நேரங்களில்‌ நடத்திட முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம்‌ 4: கோட்டை முற்றுகைப்‌ போராட்டம்‌

30.09.2024 திங்கள்‌ மற்றும்‌ 01.10.2024 செவ்வாய்‌ ஆகிய இரு நாள்களில்‌ 31 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டை முற்றுகைப்‌ போராட்டத்தை நடத்துவது எனவும்‌, ஒவ்வொரு நாளும்‌ 19 மாவட்டங்கள்‌ வீதம்‌ கோட்டை முற்றுகைப்‌ போராட்டத்தில்‌ எழுச்சியுடன்‌ பங்கேற்பது எனவும்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன. தீர்மானம்‌ 5 : தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்‌

டிட்டோஜேக்‌ பேரமைப்பின்‌ மாநில் உயர்‌ மட்டக்குழு உறுப்பினர்களை உடனடியாக அழித்துப் பேசி 31 அம்ச க்கோரிக்கைகளுக்குத்‌ தீர்வுகாண வேண்டுமாய்‌ தமிழ்நாடு முதலமைச்சரை பொதுக் குழு பெரிதும்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக் கொள்கிறது''.

இவ்வாறு தொடக்கக் கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.