B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A = 4970 Posts 5 Years Pay Order - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 2, 2024

B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A = 4970 Posts 5 Years Pay Order



B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A = 4970 Posts 5 Years Pay Order

பள்ளிக் கல்வி - # ' 2011-2012 - ஆம் கல்வியாண்டில் அனைவளுக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவித்தப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் , 710 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்நீட்டிப்பு D வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2011-2012-ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித்[பக5(1)]துறை

நாள்.01.08.2024

அரசாணை (1டி) எண்.177

திருவள்ளுவர் ஆண்டு 2055, குரோதி வருடம், ஆடி-16

படிக்கபட்டவை :- 1. அரசாணை (நிலை) எண்.198 பள்ளிக் கல்வித் (சி2) துறை, நாள் .07.12.2011.

2. அரசாணை (நிலை) 6T6OOT.38 பள்ளிக் கல்வித் (அகஇ1) துறை, நாள் .18.02.2016.

3. அரசாணை(1டி) எண்.62, பள்ளிக் கல்வித் (பக5(1) )துறை, நாள்.26.04.2021

4. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.000608/எல்/இ3 /2021 நாள். 18.01.2024

5. அரசு கடித (efile) எண்.3770/பக5(1)/2024, நாள்.30.04.2024

6. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்.001512/எல்/இ3/2021

நாள்.02.07.2024

ஆணை:-

பார்வை (1)-ல் காணும் அரசாணையில் 2011-2012-ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 710 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 3550 ஆசிரியர் பணியிடங்களும், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 4970 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டது.

கல்வித் 2. மத்திய அரசின் அனைவருக்கும இடைநிலை திட்டத்திற்கான 2013-2014-ஆம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழுவில் 2011-2012-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 710 உயர்நிலை பள்ளிகளில் 158 பள்ளிகளுக்கான ஒப்புதல் நீக்கம் செய்யப்பட்டது. எனினும் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி தொடர்ந்து செயல்பட அனுமதித்தும், இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான செலவினம் மாநில நிதியில் மேற்கொள்ள அனுமதித்து மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது. 3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் 4970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வழங்கப்பட்டது. பார்வை -4ல் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் 01.01.2024 முதல் 31.03.2024 வரை மூன்று மாதத்திற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு (Express Pay Order) வழங்கப்பட்டது. பார்வை 5-ல் காணும் அரசு கடிதத்தில் 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதியக் கொடுப்பாணை (Pay Authorisation) முடிவடைந்துள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 31.12.2024 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு மேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

4. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி 2011-2012-ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 710 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி நலத்துறை நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 3550 ஆசிரியர் பணியிடங்களும், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 4970 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

5. மேலே பத்தி 4-ல் தொடர் நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில், 552 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கல்வித்துறை சார்ந்த 2,760 ஆசிரியர் மற்றும் 1,104 அலுவலக பணியாளர்கள் ஆக மொத்தம் 3864 பணியிடங்களுக்கான செலவினம் முதற்கண் கீழ்கண்ட கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- "2202-பொதுக்கல்வி – 02 இடைநிலைக் கல்வி 109 அரசு இடைநிலைப் பள்ளிகள் -மாநிலச் செலவினங்கள்- KH அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளிகளை நிலை உயர்த்துதல் - 301 சம்பளங்கள்". (த.தொ.கு.2202-02-109-KH-30100)

6. பார்வை 1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 3864 பணியிடங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் சம்பளம் குறித்த செலவினம் கீழ்க்கண்ட கணக்கு தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்:-

"2225 — ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன் 01 -ஆதிதிராவிடர் நலன் 277 கல்வி மாநிலச் செலவினங்கள் சம்பளங்கள். — AA பள்ளிக் கல்வி." 301

— (த.தொ.கு DPC 2225-01-277-AA-30100).

7. மேலே பத்தி 4-ல் தொடர் நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில், 552 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்களின் ஊதியச் செலவினங்கள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திலிருந்து உடனுக்குடன் ஈடுசெய்யப்பட்டு, கீழ்க்கண்ட கணக்கு தலைப்பில் வரவு வைக்கப்பட வேண்டும்: "0202 ― கல்விப் போட்டி - விளையாட்டுகள், கலையும் பண்பாடும் – 01 பொதுக் கல்வி 102 இடைநிலைக் கல்வி - AL அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தல்". (த.தொ.கு.0202-01-102-AL-22101).

8. மேலே பத்தி 4-இல் தொடர் நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில், மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் செலவினம் அனுமதிக்கப்பட்ட 158 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் 1,106 பணியிடங்களுக்கானச் செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- "2202 — - பொதுக்கல்வி 02 இடைநிலைக் கல்வி இடைநிலைப் பள்ளிகள்- மாநிலச் செலவினங்கள் — 109 அரசு — AA அரசு இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் சம்பளம் 301 - சம்பளங்கள்". (த.தொ.கு.2202-02-109-AA-30100). 9. இவ்வாணை, இத்துறையின் மின்கோப்பு எண்.7000/பக5(1).2024, நாள். நிதித்துறையிடம் பெறப்பட்ட இசைவின்படி வெளியிடப்படுகிறது. 31.07.2024 CLICK HERE TO DOWNLOAD B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A = 4970 Posts 5 Years Further Cont. 1-1-24 to 31.12.28 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.