ஆசிரியர்களை மிரட்டியதால் கண்காணிப்பாளருக்கு நிர்வாக மாறுதல்...!!!
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை மிரட்டியதற்காகவும் மிரட்டி பணத்தை பெற்றதற்காகவும் , கண்காணிப்பாளருக்கு நிர்வாக மாறுதல்...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள். சென்னை-06
ந.க.எண்.000158/அ3/இ1/20024 நாள். 21.08.2024
பொருள்:
பள்ளிக்கல்வி- தமிழ்நாடு அமைச்சுப்பணி மாவட்டம்.- சிவகாசி விருதுநகர் மாவட்டக் கல்வி (இடைநிலைக்கல்வி) அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் திரு. திரு.ஆ.கண்ணன் என்பாருக்கு- நிருவாக மாறுதல் வழங்குதல் தொடர்பாக.
பார்வை:
1. அரசாணை நிலை எண்.10. பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்புத் துறை, நாள்: 07.01.1994.
2.விருதுநகர், முதன்மைக் கல்வி அலுவலரின்(பொ) கடித 17.08.2024
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாவட்டக் கல்வி (இடைநிலைக்கல்வி) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் திரு.ஆ.கண்ணன் என்பார் நிர்வாக நலனை பாதிக்கும் வகையில், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதிக்குட்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகித்து வரும் நிர்வாகி மற்றும் முதுகலை ஆசிரியர்களை மிரட்டி வருவதாகவும், உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு பேரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு பிரச்சனையை தூண்டி பெரிதாக்குவதாகவும். தொடர்ந்து 5-ஆண்டுகள் அங்கு பணிபுரிவதாலும் அனைத்து மட்டங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் மந்தன முறையில் விசாரணை செய்தவகையில் அறியமுடிகிறது. எனவே. நிர்வாக நலன் கருதி மாறுதல் செய்யும்படி பார்வை(2)ல் காணும் கடிதத்தில் புகார் அளித்துள்ளார்.
எனவே,விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேற்படி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் திரு.ஆ.கண்ணன் என்பவருக்கு கரூர் மாவட்டம் தோகைமலை. வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு நிருவாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.
மேற்படி பணியாளரைத் தற்போதைய பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு உடன் புதிய பணியிடத்தில் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பணியாளரின் பணிவிடுவிப்பு மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையை
இவ்வியக்ககத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
Thursday, August 22, 2024
New
ஆசிரியர்களை மிரட்டியதால் கண்காணிப்பாளருக்கு நிர்வாக மாறுதல்...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.